தோண்டத் தோண்ட பூதம்.. My V3 Ads விஜயராகவன் காட்டிய Ph.D சான்றிதழ் போலி.. லிஸ்ட்லயே இல்லயா? பகீர்!
கோவை: எம்.எல்.எம் மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட MyV3 Ads நிறுவனர் விஜயராகவன் போலி சான்றிதழை காட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரிய போலிச் சான்றிதழ் மோசடி கும்பல் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, மை வி3 எம்.டி சக்தி ஆனந்த் உள்ளிட்டோர் குருஜி என்று அழைப்பது விஜயராகவனைத்தான். விஜயராகவன் தான் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் எல்லாமுமாக இருந்துள்ளார். விஜயராகவனை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு மதுரையில் கைது செய்தனர்.

யார் இந்த விஜயராகவன்?: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இதன் கிளைகளை கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி முதலீடு பெற்ற நிலையில், திடீரென அந்த நிறுவனத்தை மூடி, முதலீடு செய்தவர்களுக்கு கம்பி நீட்டினார். இவரது நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த சக்தி ஆனந்தன் அதில் இருந்து வெளியே வந்து மை வி3 ஏட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்திற்கான பணிகளை விஜயராகவன் செய்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜயராகவன் நடத்தும் நிறுவனம் தான் மூலிகை பொருட்கள், சித்த மருத்துவ மாத்திரைகளையும் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி வந்துள்ளது. இப்படியாக, விஜயராகவன் தான் மை வி3 நிறுவனத்தின் மறைமுக தலைவராக இருந்து வந்துள்ளார்.
ஆயுர்வேத பொருட்களை தயாரித்தது யார்?: இந்நிலையில் கடந்த மாதம் My V3 Ads நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது கோவை மாநகர குற்ற பிரிவு காவல் துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்தனர். யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் வரும், எவ்வளவு பணம் கட்டுகிறோமோ அதற்கேட்ப ஆயுர்வேத பொருட்களும் கிடைப்பதோடு கூடுதலாக வருமானமும் கிடைக்கும் என கூறி மோசடி செய்வதாக புகார்கள் குவிந்த நிலையில் சக்தி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன் எனவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து விஜயராகவனை அழைத்து கோவை மாவட்ட பொருளாதார குற்றைப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை தயாரிப்பது தொடர்பான அவரிடம் காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.
போலி பட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவத்தில் முனைவர் பட்டம் முடித்திருப்பதாகக் கூறி அதற்கான சான்றிதழ்களை காட்டியுள்ளார் விஜயராகவன். அவற்றை காவல்துறையினர், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே அனுப்பி ஆய்வு செய்த போது அவை போலியான சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுரையில் விஜயராகவனை கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது விஜயராகவன் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது மருத்துவ சோதனையில் தெரிய வந்த நிலையில் அவரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மதுரையில் இருந்து கோவை அழைத்து வந்தனர். விசாரணையில் MyV3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு மருந்து மற்றும் மூலிகை பொருட்களை விஜயராகவன் தான் சப்ளை செய்து வருவதும், ஆனால் முறையான படிப்பு எதுவும் படிக்காமல், அண்ணாமலை பல்கலையில் இயற்கை மருத்துவத்தில் முனைவர் பட்டம் முடித்து இருப்பதாக பொய்யாக சான்றிதழை உருவாக்கி இருப்பதும் தெரியவந்தது.
மாத்திரை தரம் ஆய்வு?: இதனைத் தொடர்ந்து மோசடி செய்தல் உட்பட 4 பிரிவுகளில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விஜயராகவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயராகவன் 80 க்கும் மேற்பட்ட இயற்கை முலிகை பொருட்கள் மற்றும் மாத்திரைகள் தயாரித்து வரும் நிலையில் மருத்துவத்துறை மூலம் அவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதோ சர்ட்டிபிகேட்.. பாருங்க: மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜயராகவன், தனது பிஎச்.டி பட்ட சான்றிதழ் எனக் கூறி முன்பு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தன்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், தான் அண்ணாமலை பல்கலையில் பி.எச்.டி முடித்தவன் என்றும், அதற்கான சான்றிதழ் இதோ, நான் பிஎச்டி பட்டம் பெற சமர்ப்பித்த ரிப்போர்ட் இதோ என்று சான்றிதழ்களைக் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழக ஐடி கார்டை அணிந்தபடி பேசி இருந்தார் விஜயராகவன்.
ஆனால், விஜயராகவன் காட்டிய சான்றிதழில் இருந்தபடி, 2022ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முடித்தவர்கள் பட்டியலில் விஜயராகவன் பெயரே இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதோடு, faculty of medicine முனைவர் பட்டம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே இல்லை என்பதும், அவர் காட்டிய சான்றிதழில் உள்ளபடியான பதிவு எண் அங்கு வழங்கப்படுவதே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தோண்டத் தோண்ட பூதம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே நடத்தப்படாத ஒரு பிரிவில் அங்கு எப்படி பிஎச்.டி முடித்திருக்க முடியும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. போலிச் சான்றிதழ் தயாரிக்கும் கும்பலிடம் இருந்து, விஜயராகவன் இந்த சான்றிதழ்களைப் பெற்றிருப்பாரோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. விஜயராகவன் காட்டிய சான்றிதழ் மூலம், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ்களை மிகப்பெரிய போலிச் சான்று கும்பல் ஒன்று உருவாக்கி, ஏமாற்றி வருகிறதோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
விளம்பரம் பார்த்தால் வருமானம் எனக் கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில், ஆயுர்வேத பொருட்கள் விற்கப்பட்டிருப்பதும், அதை தயாரித்து கொடுத்தவர் போலி சான்றிதழ் மூலம் ஏமாற்றி வருவதும், அவர் முன்பே எம்.எல்.எம் நிறுவனம் நடத்தியவர் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.எம் மோசடி விவகாரத்தை தோண்டத் தோண்ட நாளுக்கு நாள் புதுப்புது பூதம் கிளம்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications