விலகாத “மர்மம்”.. கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷ்.. இரவு நடந்தது என்ன? 7 பேரிடம் போலீஸ் விசாரணை
கோவை: உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதில் உயிரிழந்த ஜமேஷ் முபினுடன் இரவு தங்கி இருந்த 4 பேர் உட்பட 7 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஷ்வரர் கோயில் அருகே நேற்று அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து, காரில் இருந்த நபர் உயிரிழந்தார்.
இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அடையாளம் கண்ட போலீஸ்
இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் ஜமேஷ் முபின் என்ற பொறியியல் பட்டாதாரி என்பது தெரியவந்தது. அவர் ஒட்டிவந்த சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இறந்தவர் யார்?
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷ் என போலீசார் விசாரணையில் கண்டனறிந்தனர். இந்த சம்பவம் விபத்தா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

வெடிமருந்து
இறந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரணை செய்யப்பட்டவர் என்று தெரிவித்த சைலேந்திர பாபு, அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும், காரில் ஆணிகள் இருந்ததாகவும் கூறி இருக்கிறார். இறந்தவர் மீது வழக்குகள் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.

7 பேரிடம் விசாரணை
இவரது செல்போனில் கடைசியாக தொடர்புகொண்ட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறிய டிஜிபி என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஜமேஷ் முபின் மற்றும் சிலர் வீட்டில் இருந்து வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதற்கிடையே ஜமேஷ் முபின் இறப்பதற்கு முதல் நாள் இரவு அவரோடு இருந்த 4 பேர் உட்பட 7 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications