தினுசு கண்ணா தினுசு! உடைந்து போன அதிமுக கூட்டணி! ஊருக்கே லட்டு கொடுத்து கொண்டாடிய பொள்ளாச்சி பாஜக!
பொள்ளாச்சி: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அறிவித்ததுதான் தாமதம்.. இந்த் அறிவிப்பை அண்ணா திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது ஆச்சரியமில்லை. ஆனால் பாஜக தொண்டர்களோ இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பின்னர் அண்ணாவை பற்றி, பெரியாரை பற்றி, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுகிறார் அண்ணாமலை. எங்களுடைய முன்னோடிகளை விமர்சனம் செய்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த விமர்சனங்களுக்கு அதிமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள். ஒரே விஷயம்தான் மேலே சொல்லியும் இவரு அடங்கமாட்டார் எனில் மேலே சொல்லித்தானே நடக்கிறது. தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதைத்தான் இப்போது சொல்ல முடியும். எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் என்றார்.

மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் போனால் எங்களுக்கு இழப்பு இல்லை. அவர்களுக்குதான் இழப்பு. பாஜக என்பது அதிமுகவுக்கு வேஸ்ட் லக்கேஜ்; எக்ஸ்ட்ரா லக்கேஜ் அல்ல. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் நோட்டாவை கூட தாண்ட முடியாது. அத்தனைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. கூட்டணி தர்மத்தை மீறக் கூடிய ஒருவரை அதிமுக தொண்டர்கள் மதிக்க வேண்டிய தேவை இல்லை. தன்மானத்தின் அடிப்படையில் அதிமுக தொண்டர்கள் தாங்கமாட்டார்கள். அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்கிற நிலைப்பாட்டைத் திரும்ப திரும்ப சொல்கிறோம் என்றார் ஜெயக்குமார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதாவது அண்ணாமலை சொன்னது சரி; ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என்பதுதான் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கருத்து.
தமிழ்நாட்டில் பாஜகவால் தனித்தே போட்டியிட முடியாது என்பதை நன்றாக உணர்ந்த காரணத்தால் அதிமுக வெளியேற்றிவிட்டோம் என சொன்ன பிறகும் இல்லை இல்லை அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்கிறது தமிழ்நாடு பாஜக.
இதனிடையே பொள்ளாச்சியில் திடீரென பாஜகவினர் சாலைகளில் சென்ற பொதுமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது பாரத் மாதா கீ ஜே கோஷமும் போட்டனர். அத்துடன், "அண்ணாமலை தனித்து போட்டியிடுகிறார்.. அதனால லட்டு தருகிறோம்" என ஒரு காரணத்தையும் சொன்னார்கள் பொள்ளாச்சி பாஜகவினர். சூப்பர் இல்ல!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications