பொள்ளாச்சி காதலனுக்காக.. செய்யக்கூடாத தவறு செய்த 19 வயது பெண்.. அடுத்தடுத்து அதிரும் கோவை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காதலனுக்காக செய்யக்கூடாத காரியத்தையெல்லாம் செய்து, இளம்பெண் ஒருவர் சிக்கியுள்ளார்.. இப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணையின் பிடியில் உள்ளார்.. சம்பவத்தில் மாணவியின் காதலன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் தேடி வருகின்றனர். என்ன நடந்தது கோவை மாவட்டத்தில்?
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது ஆ.சங்கம்பாளையம்.. இங்கு வசித்து வருகிறார் ஜாய் பிரியன்சி என்ற 19 வயது பெண்.. பொள்ளாச்சியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிகாம் CA இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்..

பொள்ளாச்சி ஜோடி
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, தனது தோழி ஒருவரின் வீட்டுக்கு ஜாய் பிரியன்சி சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாருமே இல்லை.. உடனே இந்த சான்ஸை பயன்படுத்தி, அங்கிருந்த பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகையை திருடியிருக்கிறார்.
இதனிடையே, வீட்டிலிருந்த நகை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தந்தார்கள்.. இது தொடர்பாக போலீசாரும் விசாரணையை தொடங்கினர். விசாரணையின்போது, நகை திருடப்பட்ட விதம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தார்கள்.
பைக் வாங்கி தந்த காதலி
அப்போதுதான், தோழியின் வீட்டில் இருந்து ஜாய் பிரியன்சியே நகையை திருடியது தெரியவந்தது தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, அவர் திருடிய 9 பவுன் நகையை, ஒரு அடகு கடையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து தனது 20 வயது காதலன் ஜனகன் சிவாவுக்கு பைக் வாங்கிக் கொடுத்துள்ளார்.. இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலனுக்கு பைக் வாங்கித் தர வேண்டும் என்ற ஆசையிலேயே மாணவி இப்படி நகையை திருடியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜாய் பிரியன்சி மீது திருட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். அதேநேரத்தில், திருடப்பட்ட நகையை விற்ற பணத்தில் பைக் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த, ஜனகன் சிவா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் இப்போது தலைமறைவாகி விட்டாராம்.. அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
போத்தனூர் கொள்ளை
இப்படித்தான் 4 நாட்களுக்கு முன்பு, கோவை போத்தனூரில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.. அங்கேயும் தன்னுடைய காதலன் பரணிதரனுக்காக, காதலி சிந்து, கொள்ளையடிக்க நகையை பிளான் செய்தார்.. காதலனின் கடனை அடைக்கவும், காதலனுக்கு சொகுசு கார் வாங்கி தந்து, அதில் உல்லாசமாக ஊர் சுற்றி வரவும் முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே, முகமூடி அணிந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முடிவு செய்த சிந்து, காதலனையும் உசுப்பி விட்டுள்ளார்..
மாணவிகள் ஏன் இப்படி?
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, 70 வயது சரஸ்வதி பாட்டியின் கழுத்திலிருந்த நகையை முதன்முறையாக அறுத்து கொள்ளையடித்துள்ளனர்.. ஆனால், அங்கிருந்த சிசிடிவி காட்சியை வைத்து, 24 மணி நேரத்தில் இந்த காதல் ஜோடியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துவிட்டார்கள். கைதான சிந்து, எம்பிஏ பட்டதாரியாம். இப்போது பொள்ளாச்சியில் கைதான பெண்ணும் CA படிப்பவர்..
உயர்கல்வி படிக்கும் மாணவிகள் பலரும் தங்கள் எதிர்காலத்துக்காக கடினமாக உழைத்து வரும் நிலையில், காதல், பண ஆசை, ஆடம்பர வாழ்க்கை போன்ற காரணங்களுக்காக சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வியும், வருத்தமும் எழுகிறது. இளம் வயதிலேயே தவறான பாதையில் செல்லாமல் இருக்க, பெற்றோரும் நண்பர்களும் அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து, சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டியது அவசியமாகிறது...!!!


Click it and Unblock the Notifications
