ஆளுநர் ரவிக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடையை பார்சல் அனுப்பிய பொள்ளாச்சி திமுக! காக்கி டவுசர்-வெள்ளை சட்டை!
கோவை: ஆளுநர் ரவிக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடையை பார்சல் அனுப்பி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள் பொள்ளாச்சி நகர திமுக நிர்வாகிகள்.
ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி நிற டவுசர் 4 செட், வெள்ளை நிற சட்டை 4 செட் என அஞ்சல் அலுவலகம் மூலம் பார்சலில் அனுப்பியுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட இனத்தையே கொச்சைப்படுத்தி விட்டதாக கூறி பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் இந்த சீருடையை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கக்கோரியும் ஆளுநர் மீது இன்னும் சில குற்றச்சாட்டுக்களை கூறியும் உச்சநீதிமன்ற கதவை தட்டியுள்ளது தமிழக அரசு. அதுமட்டுமல்ல ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு போன்ற கட்சியின் சீனியர்கள் மூலமும் ஆளுநர் ரவிக்கு எதிராக அவ்வப்போது காட்டமான பதிலடிகளை கொடுத்து வருகிறது திமுக தலைமை.
இந்நிலையில் ஆளுநர் ரவி தொடர்ந்து திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாகவும் பேசும் மேடைகளிலெல்லாம் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமாகவே பேசி வருகிறார் எனவும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன், இனி ஆர்.எஸ்.எஸ். சீருடையையே ஆர்.எ.ரவி அணிந்து கொள்ளலாம் எனக் கூறி 4 செட் யூனிஃபார்மை பார்சல் அனுப்பியுள்ளார்.

திராவிட என்றொரு இனமே இல்லை என ஆளுநர் எப்படி கூறலாம் என்றும் திராவிட இனத்தையே இதன் மூலம் அவர் கொச்சைப்படுத்தி விட்டார் எனவும் பொள்ளாச்சி நகர திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் மூலம் ஆளுநர் மற்றும் திமுக இடையேயான மோதல் இன்னும் முற்றக்கூடும் எனத் தெரிகிறது.
இன்று காலை கூட ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்ற ஆளுநர் ரவி, தன்னிடம் கை கொடுத்த அமைச்சர் சேகர்பாபுவை கண்டுகொள்ளாமல் அவருக்கு பின்னால் நின்றவருக்கு வணக்கம் சொல்லியது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநர் ஒருவருக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை பார்சல் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட்












Click it and Unblock the Notifications