நடு நடுங்கிய பொள்ளாச்சி.. அதிர வைத்த இரட்டை கொலை.. கொடூரனாக மாறிய இளைஞர்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் வீடு புகுந்து இரட்டை கொலையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள அஸ்திரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.

சட்டம் ஒழுங்கு
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, போதை கலாசாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். பெண்களுக்கு வீடு, கல்வி நிறுவனம், பேருந்து, மருத்துவமனை உள்ளிட்ட எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகள் என மொத்தம் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பூபதியின் இரண்டு மகள்கள் கலையரசி மற்றும் அவரின் பாட்டி மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர்.
இரட்டை கொலை
அப்போது பூபதி வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு இளைஞர் ஒருவர் அவர்களின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அந்த இளைஞர் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தியுள்ளார். அதிர்ச்சியான பாட்டி மயிலாத்தாள் தடுக்க முயற்சியுள்ளார். இளைஞர் மயிலாத்தாளையும் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை தடுக்க வந்த 16 வயது சிறுமியின் அக்காவையும் இளைஞர் குத்தியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டிற்குள் வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காதல் விவகாரம் [Pollachi Double Murder]
16 வயது சிறுமியும், மயிலாத்தாளும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட தகவல்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் நெகமம் கபுலங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (24) என்ற இளைஞர் என தெரியவந்தது.
அபிஷேக் கடந்த சில வருடங்களாக சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென பூபதி குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அவள் இன்னும் திருமண வயதையே எட்டவில்லை என பூபதி மறுத்துள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் தான் அபிஷேக் வீடு புகுந்து இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
சோகம்
இந்த சம்பவம் பொள்ளாச்சியில் சோகம் ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களின் சடலங்களை பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொலை செய்த அபிஷேக் தலைமறைவாகியுள்ளார். அவரை நெகமம் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications