பலான வேலை பார்த்த பாப் பாதிரியார்..ஜான் ஜெபராஜை மாட்டி விட்டது மனைவியா? இப்போ கோர்ட்டில் நிக்குறார்!
கோவை: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பாப் பாடக மத போதகரான ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறார் ஜான் ஜெபராஜ். அதில் தனது மனைவியை சிலர் தவறுதலாக வழி நடத்துவதாகவும், அதனால் தன்னைக் குறித்து அவதூறு பரப்பி வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஜான் ஜெபராஜ்.
கோவையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் அங்கு எட்மின் ரூட் என்பவருடன் இணைந்து மத ஆராதனை கூட்டங்களை நடத்தி வந்தார். கோவை கிராஸ்கட் சாலையில் கிங் ஜெனரேஷன் என்ற பிரார்த்தனை கூடத்தை அவர் நடத்தி வந்த நிலையில் சக மத போதகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

பொதுவாக கத்தோலிக்க திருச்சபைகளில் அல்லது பிற மத நிகழ்வுகளில் மிக அமைதியாக மத போதகர்கள் பேசுவது வழக்கம். ஆனால் ஒருமையில் பேசுவது, நடனம் ஆடுவது, குத்து பாட்டு பாடுவது என ஜான் ஜெபராஜ் ஆராதனை நிகழ்ச்சிகள் வேறு மாதிரியாக இருந்தன. இதனால் அவரை வெளிப்படையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் எட்வின் ரூசோ உடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் சில சிறுமிகளை முத்தமிடுவது போல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு நெருக்கமானவர்கள் தான் அந்த வீடியோக்களை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ஜான் ஜெபராஜ் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்ததாகவும் அதில் கலந்து கொள்ள வந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தலைமுறைவாக இருக்கிறார். ஜான் ஜெபராஜைஜ் கைது செய்ய கோவை, தென்காசி, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் பலமுறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு இருப்பதால் ஜான் ஜெபராஜ் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்வதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஜான் ஜெபராஜ்-க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டேன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என ஜான் ஜெபராஜ் கூறியிருக்கிறார். மேலும் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவரை சிலர் தவறாக வழிநடத்தும் நிலையில் தன்னைக் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் ஜான் ஜெபராஜ் கூறி இருக்கிறார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications