ரூமுக்குள் டிரஸ் மாற்றும் பெண்களை.. ஆபாச வீடியோ எடுத்த கொடுமை.. பெட்ரோல் பங்க் ஷாக் வீடியோ

பெண் ஊழியர்கள் உடை மாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெட்ரோல் பங்க் துணி மாற்றும் அறையில் பெண்களை.. ஆபாச படம் எடுத்த கொடுமை.. - வீடியோ

    கோவை: ரூமுக்குள் அடுத்தடுத்து 5 பெண்கள் வரிசையாக வந்து டிரஸ் மாற்றி கொண்டு வெளியேறுகிறார்கள்.. பெட்ரோல் பங்கில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனியில் உள்ளது.

    இந்த பங்கில் நிறைய பெண் ஊழியர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.. இந்த பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றுவதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர்.. இந்த வீடியோக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    செல்போன்

    செல்போன்

    அந்த வீடியோவில், பெண்கள் உடை மாற்றும் ரூமுக்குள், பெண்கள் வருவதற்கு முன்னதாக ஒரு ஆண் ஊழியர் வருகிறார்.. தன்னுடைய செல்போனை ஆன் செய்துவிட்டு, அதை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டுபோகிறார். கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு பெண் ஊழியர்களும் அந்த ரூமுக்குள் வருகிறார்கள்.

    யூனிபார்ம்

    யூனிபார்ம்

    ஒவ்வொருத்தராக வந்து, வீட்டில் இருந்து அணிந்து வந்த டிரஸ்ஸை கழட்டிவிட்டு, அதை ஒரு பையில் வைக்கிறார்கள்.. பிறகு அணியும் யூனிபார்மை போட்டு கொள்கிறார்கள்.. இப்படி 5 பெண்கள் வரிசையாக வந்து டிரஸ் மாற்றுகிறார்கள்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இவர்கள் எல்லாரும் அந்த ரூமை விட்டு போன பிறகு, ஏற்கனவே வந்து போன அதே ஆண் ஊழியர் திரும்பவும் ரூமுக்குள் நுழைந்து அந்த செல்போனை எடுத்து செல்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    வறுமை

    வறுமை

    இதில் கொடுமை என்னவென்றால், குடும்ப சூழ்நிலை காரணமாக பல பெண்கள் இந்த பெட்ரோல் பங்குகளில் வேலை பார்த்து வருகின்றனர்.. போதுவாக வேலைக்கு வந்ததும், அணிந்து வரும் உடைகளை மாற்றி விட்டு பெட்ரோல் பங்கில் கொடுக்கும் டிரஸ்களை அணிவது வழக்கம்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    பெண்கள் தங்களது உடைகளை மாற்றுவதற்காக ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கி தரப்படும்.. அப்படித்தான் இந்த பங்கிலும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெண்கள் அறைக்கு எப்படி ஆண் சூப்பர்வைஸரை நியமித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பெரும் சலசலப்பையும், அதிர்ச்சியையும், கவலையையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+