கோவை மக்களே உஷார்.. இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை 'பவர்கட்'.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விவரம்
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவையில் ஆர்.எஸ்.புரம், லாலிரோடு, பொன்னையராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் இன்று (செப்டம்பர் 24 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவையில் செப்டம்பர் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை ஏற்படுகிறது. மாலை 5 மணிக்கு பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்: பால்கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை பஜார், காந்தி பார்க், ஆர்.ஜி. தெரு, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, லாலி ரோடு, டி.பி.ரோடு, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி ரோடு (கிழக்கு, மேற்கு), சம்பந்தம் ரோடு (கிழக்கு, மேற்கு), லோகமனியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்குவீதி, ராஜவீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, பி.எம். சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு
சின்ன தடாகம் துணை மின் நிலையம்: ஆனைகட்டி, பண்ணிமடை (ஓரு பகுதி) பெரிய தடாகம், சின்ன தடாகம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications