கோவையில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை 'பவர்கட்'.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவை பீளமேடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நாளை (ஜனவரி 9 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அதனிடமிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
பீளமேடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படவுள்ளது.
அதேபோல, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர்.
மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடைபடவுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications