ஜெயிலில் பதற்றம்.. கைதிகள்- வார்டன்கள் இடையே பயங்கர மோதல்.. பிளேடால் கையை அறுத்துக்கொண்டு போராட்டம்!
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கைதிகள் தாக்கியதில் 4 சிறை வார்டன்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு சட்டக் கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று கோவை மத்திய் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கைதிகள் கடுமையாகத் தாக்கியதில் 4 சிறை வார்டன்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் கோவை மத்திய சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சிறைக்காவலர்கள் ராகுல், மோகன்ராம், பாபுஜான், விமல்ராஜ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சிறை வளாகத்தில் கைதிகள் மரத்தின் மீது ஏறி கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் கைதிகளை சமரசப்படுத்திய சிறைக் காவலர்கள், சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த மோதல் சம்பவம் காரணமாக கோவை மத்திய சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications