பெல்ட்டால் அடித்தார்.. நைட்டியுடன் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.. போலீஸில் பேராசிரியை புகார்
கணவன் மீது பேராசிரியை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
கோவை: "தெரியாத்தனமா, சின்ன வயசு லவ்-வை புருஷன் கிட்ட சொல்லிட்டேன்.. அதுக்காக என்னை பெல்ட்டாலயே அடித்து, நைட்டியுடன் வெளியேறி வந்துவிட்டேன்" என்று கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பேராசிரியை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை இடையர்பாளையம் அன்புநகரை சேர்ந்தவர் சார்லஸ். இவர் சவுமியா என்பவரை காதலித்தார். சவுமியா ஒரு கல்லூரி பேராசிரியை. வயசு 32 ஆகிறது.

பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு என்பதால், வீட்டை விட்டு ஓடிப்போய், சார்லஸை கல்யாணம் செய்து கொண்டார். சார்லசின் பெற்றோர் இருவருக்கும் கடந்த மே மாசம் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், துடியலூர் அனைத்து மகளிர் போலீசுக்கு சவுமியா ஒரு மனுவுடன் வந்திருந்தார். அதில் அவர் சொல்லி உள்ள சுருக்கம் இதுதான்:
தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். நானும், சார்லசும் கல்யாணம் ஆகி ஒருவாரம்தான் சந்தோஷமாக இருந்தோம். அப்போ என்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து சார்லஸ் கேட்கவும், நானும் எதார்த்தமாக சிறுவயதில் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்தது குறித்து சொன்னேன். இதை சாதாரணமாக எடுத்து கொள்வார் என்று பார்த்தால், சந்தேகப்பட்டு பெல்ட்டால் அடித்து விட்டார்.
மேலும், கல்யாண ரிசப்ஷன் செலவு 1 லட்சத்தை வீட்டிலிருந்து வாங்கி வருமாறு என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் சம்பவத்தன்று நைட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருத்தரோட போன் வாங்கி என் பெற்றோரிடம் சொல்லி அழவும், அவர்கள் என்னை வீட்டுக்கு வருமாறு சொன்னார்கள்.
இப்போது அவர்களுடன்தான் வசித்து வருகிறேன். என்னை தாக்கி பணம் கேட்ட கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் இந்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications