அண்ணாமலையை எதிர்க்கும் கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கோவை: கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் கலாமணி ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இருவருடைய சொத்து மதிப்பு விவரங்களும் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். வேட்பு மனு தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கிட்டதட்ட வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை வீழ்த்த தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக வியூகம் வகுத்து வருகின்றன.
கோவை தொகுதியில் திமுகவில் கணபதி ராஜ்குமாரும் அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி போட்டியிட உள்ளார். தற்போது கோவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் சொத்து விவரங்கள் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அசையும் சொத்தாக தனது பெயரில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 9,023 உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி ஸ்ருதி பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 65,320 மதிப்பில் அசையும் சொத்து உள்ளது.
அசையா சொத்துக்கள் முறையே ரூ.12 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் ரூ.20 லட்சத்து 100 மதிப்பிலும் இருப்பதாக கூறியுள்ளார். சிங்கை ராமச்சந்திரன் பெயரில் 14 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா marazzo காரும், மனைவி பெயரில் 8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா Amaze காரும், ஒரு ஜூபிடர் பைக்கும் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணிக்கு ரூ.47 லட்சத்து 49,024 மதிப்பள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. கணவர் ஜெகநாதன் பெயரில் ரூ.34 லட்சத்து 14,830 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications