நைட்டி மாட்டி கொண்டு.. காலில் சலக் சலக் கொலுசு.. யார்னு பார்த்தீங்களா.. எதுக்குன்னு தெரியுமா..வீடியோ
நைட்டி அணிந்து உள்ளாடைகளை திருடுகிறார் மர்மநபர் ஒருவர்
Recommended Video
கோவை: பெண்களின் உள்ளாடைகளை பார்த்தாலே இவருக்கு குஷியாகிவிடும்.. அது மட்டுமில்லை.. நைட்டியை மாட்டிக் கொண்டு, காலில் கொலுசு போட்டுக் கொண்டுதான் கிளம்புகிறார்.. ஆபீசுக்கு இல்லை, திருடுவதற்கு!!!
கோவை துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே பெண்களின் உள்ளாடைகள் மிஸ்ஸிங்!
யார் எடுக்கிறார்கள், எப்போது எடுக்கிறார்கள் என்பது மட்டும் தெரியவே இல்லை.. இதுபோக சுடிதார், செருப்புகளும் மாயமாகி வந்தன.. காணாமல் போவது எல்லாமே பெண்கள் அணியும் சமாச்சாரங்கள்தான்.. அதனால் பலருக்கும் இது குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வந்தது.

நைட்டி மேன்
பிறகு திடீரென ஒரு வீட்டின் முன்பு ஏகப்பட்ட செருப்புகளும், நைட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர்.. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.. அதனால் குடியிருப்புவாசிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்... அப்போதுதான் ஒரு பெண்மணி வருவது தெரிந்தது.. ஆனால் அவரை உற்று பார்த்தபோதுதான் ஆண் என்று தெரிந்தது.

உள்ளாடைகள்
நைட்டி போட்டுக் கொண்டு.. காலில் கொலுசுடன் நடந்து வந்தார்... பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை திருடி கொண்டு அசால்ட்டாக நடந்து கொண்டிருந்தார். வீடியோவில் இந்த காட்சியை பார்த்ததும் மக்கள் அரண்டு போய்விட்டனர்... பிறகு திருடிய உள்ளாடைகள், செருப்புகளை அந்த நபர் ஒதுக்குப்புறமாக தீ வைத்து எரித்துள்ளார்.

துடியலூர்
அந்த சைக்கோ திருடர் யார் என்று தெரியவில்லை.. அவர் நடவடிக்கைகள் எல்லாமே பயத்தை உண்டுபண்ணி உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.. துடியலூர் போலீசிலும் புகார் தந்துள்ளனர்... இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு இதே துடியலூரில் ஒரு நபர், நள்ளிரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து.. குடியுருப்புவாசிகளின் பெட்ரூம்களை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து வருகிறார் என்ற புகார்கள் வந்தன.

வேறு வேறு நபர்?
அது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது. இப்போது நைட்டி மனிதர் விவகாரம் புதுசாக ஆரம்பித்துள்ளது.. இவர்கள் இருவருமே ஒரே ஆள்தானா.. அல்லது வேறு வேறு நபர்களா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். ஆனால் இந்த சைக்கோ நபரை நினைத்து, தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications