மோடியின் கட்டமைப்பை.. ஒரேயொரு ஸ்வீட் பாக்ஸால் க்ளோஸ் செய்தவர் ராகுல்.. கோவையில் பூரித்த ஸ்டாலின்
கோவை: கடந்த முறை கோவையில் நான் பங்கேற்ற கூட்டம் இந்திய அளவில் டிரெண்டானது. ஏனென்றால் 8 முறை தமிழகம் வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை ஒரு ஸ்வீட்ச் பாக்ஸால் சகோதரர் ராகுல் காந்தி க்ளோஸ் செய்தார். ராகுலின் அன்பை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ராகுல் வழங்கிய இனிப்பு எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கியது, என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்து வருகிறது.

இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களின் பேச்சை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த முறை கோவையில் நான் பங்கேற்ற கூட்டம் இந்திய அளவில் டிரெண்டானது. ஏனென்றால் 8 முறை தமிழகம் வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை ஒரு ஸ்வீட்ச் பாக்ஸால் சகோதரர் ராகுல் காந்தி க்ளோஸ் செய்தார். ராகுலின் அன்பை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ராகுல் வழங்கிய இனிப்பு எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கியது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தேர்தல் முடிவுகளை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 40க்கு 40வெற்றி என முழங்கியபோது அதனை பலரும் யோசித்தனர். ஆனால் அந்த நம்பிக்கை எனக்கு இருந்தது. அதற்கான அடித்தளம் கொள்கைக்காக இங்கே கூடியிருக்கும் கூட்டம் தான். அதோடு மேடையில் உள்ள தலைவர்கள் நம்பிக்கைக்கு ஆதாரம். இதனால் தான் 40க்கு 40 தொகுதிகளில் வென்றோம்.திமுகவின் உடன்பிறப்புகள் இந்தியா கூட்டணி கட்சிகளின் தோழர்கள் இருக்கும் திசை நோக்கி நான் வணங்குகிறேன்'' என்றார்.
முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியதன் பின்னணி என்னவென்று பார்த்தால் நாம் ஏப்ரல் மாதம் 12 ம் தேதிக்கு செல்ல வேண்டும். அன்றைய தினம் கோவை செட்டிபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு ‛கிப்ட்' கொடுப்பதற்காக ராகுல் காந்தி இரவில் சாலை மத்தியில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி குதித்து சென்று இனிப்பு கடையில் ஸ்வீட் பாக்ஸ் வாங்கினார்.
அப்போது ஒருவர் ‛யாருக்கு வாங்குகிறீர்கள்' என ராகுல் காந்தியிடம் கேட்க அவர், ‛‛என் சகோதரர் ஸ்டாலினுக்கு.. '' என தெரிவித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் அப்போது அதிகமாக பரவியது. இந்த நிகழ்வை தான் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத்தது.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications