கோவையில் சூப்பர்.. வேறலெவலில் மாறுது வட கோவை ரயில் நிலையம்.. கோடிகளை கொட்டி ரயில்வே மெகா திட்டம்
கோவை: கோவையை பொறுத்தவரை கோவை சந்திப்பு ரயில் நிலையம், வட கோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம் என மூன்று ரயில் நிலையங்களில் முக்கியமானவை. இதில் வடகோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
வட கோவை நிலையத்தில் 11.5 கோடியில் புனரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட கோவை ரயில் நிலையம் கோவையின் காந்திபுரம், சாய்பாபா காலணி, ஆர்.எஸ்.புரம், 100 அடி சாலை உள்ளிட்ட கோவையின் ஒரு பாதி மக்களுக்கு வட கோவை முக்கியமான ரயில் நிலையம் ஆகும். கோவையின் ஒரு பாதி மக்கள் இந்த ரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கோவையில் உள்ள மெயின் ரயில் நிலையமான உக்கடத்தை ஒட்டியுள்ள சந்திப்பு ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டி தரும் தெற்கு ரயில்வே ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து ஏராளமான ரயில்கள தினமும் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இது தவிர தமிழகம் வழியாக கேரளாவிற்கு செல்லும் அனைத்து ரயில்களுமே கோவையை கடந்து தான் செல்கின்றன. அந்த ரயில்களும் கோவையில் நின்று தான் செல்லும். கோவை சந்திப்பு நிலையம், அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் கோவையின் மற்ற இரண்டு முக்கிய ரயில் நிலையங்களான வடகோவை, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியினை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் மிகவும் பழமையான நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டு வருகிறது. இது எப்படி என்றால், குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு பயணிகளின் வருகை, சரக்குகளை கையாளுவது, வருவாய் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு புனரமைக்கப்படுகின்றன.
அந்த வகையில் சேலம் கோட்டத்தில் உள்ள வடகோவை நிலையத்தை புனரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்ததால், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடியில் வடகோவை நிலையத்தை புரமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வடகோவை நிலையத்தில் தற்போது 2 நடைமேடை உள்ளன. இங்கு பிரமாண்ட நுழைவு வாயில், பயணிகள் முனைய கட்டிடங்கள், பார்க்கிங் வசதி, காத்திருப்பு கூடம், கழிப்பறைகள், லிப்ட் வசதி, மேம்பாலம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலை வழியாக வடகோவை ரயில் நிலையத்திற்கு நுழைவு வாயில் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த பணிகள் முடிந்தால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் வருவாய் மேம்ப டும் என்பதால் பணிகள் வேகமெடுத்துள்ளன.
இதனிடையே வடகோவை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டால், அதன் மிக அருகில் உள்ள காந்திபுரம், 100 அடி சாலை, கிராஸ் கட் ரோடு, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, டாடாபாத், ரத்தினபுரி, சிவானந்தா காலனி, உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பெரிய நன்மையாக இருக்கும். கோவையில் வடகோவை ரயில் நிலையத்தை போலவே, போத்தனூர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படுகிறது. போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி கேரளா செல்லும் ரயில்களை, கோவை சந்திப்புக்கு வராமல் போத்தனூர் வழியாக ரயில்வே திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த முடிவுக்கு கோவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications