Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறப்பு சான்றிதழ், ஆதார் இருக்கா.. வழக்கமான பாஸ்போர்ட் vs தட்கல் பாஸ்போர்ட்.. கோவை அதிகாரி பேட்டி

Subscribe to Oneindia Tamil

கோவை: பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள், பிறந்த நாள் அசல் சான்றிதழ் மற்றும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மதிப்பெண் சான்றிதழ் அசல் ஆகியவற்றை ஆய்வின்போது காண்பிக்க வேண்டும் என்று கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் கூறினார். தட்கல் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் வழங்கப்படுவதாகவும், வழக்கமான பாஸ்போர்ட் போலீஸ் ஆய்வுக்கு பின் 10 நாட்களுக்குள் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது என்றும் கூறினார்.

கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கோவை மண்டலத்தில் பாஸ்போர்ட் வினியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கடந்த 8 மாதங்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 178 பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பாஸ்போர்ட் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்களுக்கு எளிதாக, கடந்த 30-ந்தேதி முதல் பாஸ்போர்ட் சர்வர் சேவையின் வேகம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இப்போது பணிகள் காலதாமதமின்றி விரைவாக நடக்கும். இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதல் பாஸ்போர்ட் வழங்க முடியும்.

coimbatore passport

தமிழ்நாட்டில் ஒவ்வொரு எம்.பி. தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தபால் அலுவலகங்களுடன் இணைந்து போஸ்டல் பாஸ்போர்ட் சேவை மையம் (பி.ஓ.பி.எஸ்.கே.) அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி கோவைக்கு பீளமேட்டில் பாஸ்போர்ட் சேவை மையமும், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தபால் அலுவலகத்திலும், நாமக்கல்லில் ராசிபுரம் தபால் அலுவலகத்திலும், சேலம் மற்றும் ஈரோட்டிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை அங்குள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பொள்ளாச்சியிலும் பாஸ்போர்ட் மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

பாஸ்போர்ட் கட்டணம்: உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தட்கலில் விண்ணப்பிக்கலாம். தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500 ஆகும். ஆனால் வழக்கமான பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500 ஆகும். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட்டும், 15 வயதுக்கு மேலானவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட்டும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

தட்கல் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. அதேநேரம் வழக்கமான பாஸ்போர்ட் போலீசாரின ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் 10 நாட்களுக்குள் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.தற்போது பாஸ்போர்ட் வழங்கும் பணி முன்பை விட மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், தன்னுடைய பிறந்த நாள் அசல் சான்றிதழ் மற்றும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மதிப்பெண் சான்றிதழ் அசல் ஆகியவற்றை ஆய்வின்போது காண்பிக்க வேண்டும். ஒருவர் படிக்கவில்லை என்றால் கல்வி சான்றிதழ் சமர்ப்பிக்காமல், பிறந்தநாள் சான்றிதழ் மற்றும் ஆதார் உள்ளிட்ட முகவரி அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம். படித்தவர்களுக்கு இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட்டும், படிக்காதவர்களுக்கு சாதாரண பாஸ்போர்ட்டும் தற்போது வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இ-பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் இ-பாஸ்போர்ட் வினியோகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அது நடைமுறைக்கு வந்ததும், இன்னும் பாஸ்போர்ட் சேவை இந்தியாவில் நவீனமயமாகும். கோவை மண்டலத்தை பொறுத்தவரை தொழில் ரீதியாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்பவர்களும் அதிக எண்ணிக்கையில் பாஸ்போர்ட் பெறுகிறார்கள். கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பல்வேறு என்.ஓ.சி. சான்றிதழ்கள், போலீஸ் ஆய்வு சான்றிதழ்கள், வெளிநாட்டில் பணியாற்றுபவர்களுக்கான (நோரி) சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதற்கு தனித்தனி கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+