சென்னை வேண்டாம்... கோயம்புத்தூருக்கே போகலாம்... ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கொரோனா சிகிச்சை பின்னணி
சென்னை வேண்டாம்... கோயம்புத்தூருக்கே போகலாம்... ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கொரோனா சிகிச்சை பின்னணி
Recommended Video
கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வசந்தம் கார்த்திகேயன் சென்னையில் சிகிச்சை பெறுவதை தவிர்த்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் சென்னைக்கு அருகில் உள்ள நிலையில் சிகிச்சைக்காக அவர் கோவையை தேர்வு செய்தது பற்றி விசாரித்தோம்.
கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் ஏற்கனவே தனது உடல்நலப் பிரச்சனைகளுக்கு அவர் சிகிச்சை பெற்றதால், மீண்டும் அங்கேயே சேர்ந்ததாக பதில் கிடைத்தது.

3-வது எம்.எல்.ஏ.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. ஏழை, பணக்காரர், அதிகாரி, அரசியல்வாதி, என எந்த பேதமும் இல்லாமல் அனைவரையும் இந்த நோய் ஆட்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனி சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வசந்தம் கார்த்திகேயனும் கொரோனா தொற்று காரணமாக கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வேண்டாம்
ரிஷிவந்தியம் தொகுதியை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு 2 மணி நேரத்தில் பயணப்படக் கூடிய தொலைவில் தான் இருக்கிறது. இருப்பினும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளை தவிர்த்து கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் ஏற்கனவே அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளுக்காக அவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்திருக்கிறார் என்றும் மருத்துவர்களுக்கு இவரது உடல்நிலை பற்றி தெரியும் எனவும் கூறப்பட்டது.

மன நிறைவு
இதனிடையே வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு சென்னையில் சிகிச்சை பெற மனதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வசதியான, மன நிறைவை ஏற்படுத்தக்கூடிய, எப்போதும் சிகிச்சை பெறக் கூடிய மருத்துவமனையிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

உட்கட்டமைப்பு
கோவையில் பி.எஸ்.ஜி. மருத்துவமனை, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, என பல மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பும், சிகிச்சை வசதியும் சென்னைக்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் சென்னையில் உள்ள மருத்துவமனைகளை காட்டிலும் மேம்பட்ட தரத்திலும் இருக்கிறது. இதனால் கொங்கு மண்டல மக்களின் மருத்துவ தலைநகரமாக கோவை விளங்குகிறது. சிகிச்சைக்கு சென்னைக்கு செல்லும் காலம் மாறி கோவைக்கு செல்லும் காலம் வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications