கோவை மாநகரின் அன்றாட பிரச்சனைக்கு ஸ்டாலின் தீர்வு – அடியோடு மாற போகும் 1,847 சாலைகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி கொண்டிருக்கிறது. ஆனால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. முக்கியமாக கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து பிரச்சனை வாட்டி வதைக்கிறது. தரமான சாலைகள் இல்லை என்பது மக்களின் புகாராக உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 1,847 சாலைகளை சீரமைப்பதற்காக ரூ. 106.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

கோவை மாநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரித்து நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. கல்வி, தொழில், மருத்துவம், ஐடி என்று பல துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டு கொண்டிருக்கிறது. கோவையின் பெரிய பிரச்சனை போக்குவரத்து நெரிசல் தான். கோவை மாநகரில் வசிக்கும் மக்கள் தொகையே 30 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

Coimbatore Road

கோவை சாலைகள் சீரமைக்க

தினசரி வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கோவை வந்து செல்கிறார்கள். மக்களின் எண்ணிக்கையை விட வாகனங்கள் அதிகளவு உள்ளன. போதிய உள்கட்டமைப்பு இல்லாததால் போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதை சரி செய்ய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா, யூடர்ன் முறை அமைக்கப்பட்டது.

ஆனாலும் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மோசமான சாலைகள் இருப்பதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குண்டும், குழியுமான பொத்தல் சாலைகளால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. அங்கு முறையான சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஏற்கனவே ரூ.200கோடி

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,"தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஏற்கனவே ரூ.200 கோடி மதிப்பில் சுமார் 503.67 கி.மீ நீளத்திற்கு மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 3,456 எண்ணிக்கையிலான சாலைகள் சீரமைக்கப்படுகிறது. தற்போது 3,229 பணிகள் (467.72 கி.மீ நீளம்) நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 227 சாலைக்கு (37.03 கி.மீ நீளம்) பணி நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் பணிகள் வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதலாக ரூ.106 கோடி

மேலும், கோவை மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.106.14 கோடி மதிப்பீட்டில் சாலை பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி 1,847 எண்ணிக்கையிலான சாலைகள் (254.54 கி.மீ நீளம்) புதுப்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் தார்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை புதுப்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 1379 கி.மீ நீளம் தார்சாலை, 572 கி.மீ நீளம் சிமெண்ட் சாலை புதுப்பிக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். பொது மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் இந்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். கோவையில் சாலை புதுப்பிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவலால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+