அதிமுக நமக்கு பங்காளி! பாஜகவோ பகையாளி! அதனால் விடவே கூடாது! ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்!
கோவை: அதிமுகவை பொறுத்தவரை என்னைக்கு இருந்தாலும் திமுகவுக்கு அது பங்காளி தான் என்றும் ஆனால் பாஜகவோ பகையாளி எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். சுங்கச்சாவடிகள் மூலம் பாஜக கொள்ளையடித்து வருவதாகவும் சென்னையிலிருந்து கோவைக்கு காரில் வருவதற்குள் போது போதும் என்றாகி விடுவதாகவும் அந்தளவுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கார் வைத்திருப்போர் டோல்கேட்களில் பணம் கொடுப்பதற்கு பதில் பேசாமல் விமானத்திலோ, ரயிலிலோ சென்றுவிடலாம் என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அதிமுகவை கூட கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைத்துவிடலாம் ஆனால் பாஜகவை தமிழ்நாட்டிற்குள்ளேயே விடக் கூடாது என பாய்ச்சல் காட்டினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைவாசம் சென்றதால் கோவையில் கட்சிப் பணிகள் சுணக்கம் அடைய ஆரம்பித்துள்ளன. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டாலும் நிர்வாகிகள் மத்தியில் பழைய வேகம் இல்லை. இதனால் தான் கோவைக்கு ஒரு விசிட் அடித்து கட்சி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வந்து சென்றிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
அதிமுக நமக்கு பங்காளி என்றும் பாஜக தான் பகையாளி எனவும் ஆர்.எஸ். பாரதி பேசும் போது கூட்டத்தில் இருந்த திமுகவினர் சிலர் குரல் எழுப்பி வரவேற்றனர்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications