அண்ணாமலை நமக்கு தூசு! கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி! எஸ்.பி.வேலுமணி விமர்சனம்
கோவை: கோவை நாடாளுமன்றத் தொகுதியை பொருத்தமட்டில் பாஜகவுக்கு ஓட்டே கிடையாது. போட்டியே எங்களுக்கும் திமுகவுக்கும்தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்திருந்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலை செய்ய கடைசி நாள் மார்ச் 27ஆகும்.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இந்த நிலையில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நிகழ்ந்தது.
அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு சிங்கை ராமசந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கழகத்திற்காக பணியாற்றி மறைந்த முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் மகன்தான் இவர்.
திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர்! துடைச்சுக்கத்தான் லாயக்கு! அண்ணாமலை விமர்சனம்
சிங்கை கோவிந்தராஜனுக்கு எம்ஜிஆர்தான் திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ராமசந்திரன் என பெயர் சூட்டியதும் எம்ஜிஆர்தான். பின்னர் அதிமுக ஐடி விங் மாநில செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர். மாதம் ரூ 15 லட்சம் ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த ராமசந்திரன் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்காக பாடுபட்டு வருகிறார்.
கோவையில் எந்த வேட்பாளர் நின்றாலும் கவலை இல்லை. அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் அது முடியவில்லை. தேர்தல் களத்தில் வெல்வது அதிமுகவாகத்தான் இருக்கும். மற்ற வேட்பாளர்கள் எல்லாம் நம் பக்கத்திலேயே வர முடியாது. அவர்கள் எல்லாம் தூசு!
கோவையில் போட்டியிடும் திமுகவின் கணபதி ராஜ் குமார்தான் நமக்கு போட்டி! கணபதி ராஜ்குமாருக்கு அதிமுகவில் மேயர் பதவியையும் மாவட்டச் செயலாளர் பதவியையும் கொடுத்தோம். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டு அதிமுகவுக்கு சென்று விட்டார்.
பாஜகவுக்கு 4 சதவீதம்தான் ஓட்டு இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள பாமக, தமாகா, திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஓட்டு உள்ளதா? எனவே நமக்கு போட்டி திமுகதான். இவ்வாறு வேலுமணி விமர்சித்திருந்தார்.
-
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications