கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை காவல் துறை துணை ஆணையர் என்ன நடிகர் சிம்புவா? மேல கைவைக்கிறாரு.. எஸ் பி வேலுமணி பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சிம்பு குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மின் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதால் அந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் நடத்தப்பட்டது. கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

13 அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள்! 'திமுகவுக்கு மெசேஜ்’ லிஸ்ட்டே இருக்கு! கொந்தளித்த சிவி சண்முகம்13 அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள்! 'திமுகவுக்கு மெசேஜ்’ லிஸ்ட்டே இருக்கு! கொந்தளித்த சிவி சண்முகம்

மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வு

இதில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றப்படவில்லை. மக்களை பற்றி திமுக அரசு கவலைப்படாமல் உள்ளது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தவும் திமுக அரசு தவறிவிட்டது.

53 சதவீதம்

53 சதவீதம்

குடிநீர் வரியையும் அதிகரித்துவிட்டார்கள். மின் கட்டணம் 12 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. திமுக அரசின் கவலை எல்லாம் பணத்தை எப்படி கொள்ளை அடிப்பது என்பதுதான். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை நாங்கள் காப்பாற்றியதால் ஸ்டாலினுக்கு எங்கள் மீது கோபம்.

குறுக்கு வழி

குறுக்கு வழி

குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கலாம் என ஸ்டாலின் நினைத்தார், அது நடக்காமல் போய்விட்டதே, அந்த கோபம்தான், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கோவைக்கு வந்த ஸ்டாலின் என்னை விட மாட்டேன் என்றார். என் மீதுள்ள கோபத்தில்தான் என் வீட்டில் 3ஆவது முறையாக ரெய்டு நடத்தினார்கள். வந்து எத்தனை சோபா இருக்கு, சேர் இருக்குனு மட்டும் எண்ணி சென்றார்கள்.

சிம்புவா

சிம்புவா

இந்த ஆட்சி இது போல் இனி நீடிக்காது. திமுக ஆட்சியில் திருட்டு கொள்ளை கஞ்சாவை தடுக்க போலீஸுக்கு நேரமே இல்லை. ஸ்டாலினை போல் இதுவரை எந்த தலைவர்களும் மோசமாக நடந்து கொண்டதே இல்லை. 50 ஆயிரம் கோடிக்கு மேல் திமுக அரசு லஞ்சம் வாங்கியுள்ளது. கோவை மாநகர துணை ஆணையர் சிலம்பரசன் சினிமாவில் நடிக்கும் சிலம்பரசனா சிம்புவா கட்சி பெண்கள் மீதும் எங்கள் எம்எல்ஏக்கள் மீது கை வைக்கிறார். அப்படி கை வைக்க அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

English summary
Ex Minister S.P.Velumani talks about Actor Simbu in his protest speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X