பாஜகவில் எஸ்.பி.வேலுமணி இணைவதாக பரப்பப்படும் தகவல் வதந்தி.. அதிமுக செய்தித் தொடர்பாளர் பேட்டி
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணைவதாக சொல்லப்படும் தகவல் வதந்தி என அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா தொடங்கினாலும் தொடங்கியது கரை வேட்டிகள், கட்சிக் கொடிகளின் விற்பனை ஜரூராகி வருகிறது. மறுபக்கம் கட்சி தாவல்களுக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து விஜயதாரணியை வரவேற்ற அண்ணாமலை, விஜயதாரணி மட்டுமில்லை இன்னும் பிற கட்சிகளில் இருந்து கூட முக்கிய பிரமுகர்கள் பாஜகவுக்கு தாவுகிறார்கள் என தெரிவித்திருந்தார்.
இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் நேற்று அவனாசி சாலையில் பாஜக இணைப்பு விழா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பாஜகவில் இணைவதாக உண்மைக்கு புறம்பான ஒரு தகவல் பரவியது. அந்த நேரம் பார்த்து அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் அந்த விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதனால் அவரும் பாஜகவில் இணைகிறார் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கோவையில் அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் அவினாசி சாலைக்கு சென்றது எனது தனிப்பட்ட விஷயத்திற்காக! அங்கு பாஜக இணைப்பு விழா நடைபெறுவதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சொல்கிறேன் இன்றைய தினம் இரு பாஜக எம்எல்ஏக்கள் பிற்பகல் 2.15 மணிக்கு இணைகிறார்கள். சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில்தான் இந்த இணைப்பு நிகழ்ச்சி என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பல்லடத்தில் அண்ணாமலையிடம் கேட்ட போது அந்த இரு பாஜக எம்எல்ஏக்களின் பெயர்களை அம்மன் அர்ஜுனன் சொன்னால் நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு பொத்தாம் பொதுவாக 2 பேர் என் சொல்வதெல்லாம் எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அது போல் அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இது அயோக்கியத்தனமான முயற்சி. 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அதிமுக குடும்பமாக எஸ்.பி.வேலுமணி குடும்பம் இருந்து வருகிறது. அவர் பிறக்கும் போதே அதிமுககாரராகத்தான் பிறந்தார் என கல்யாண சுந்தரம் விளக்கமளித்துள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications