கமல் vs வானதி.. "டிரா" ஆகும் மேட்ச்.. கோவை தெற்கில் நினைத்து பார்க்காத இழுபறி.. சத்தியம் சர்வே!
கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவும் என்று சத்தியம் தொலைக்காட்சியின் தேர்தல் கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் கோவை தெற்கின் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறங்குகிறார்.
இதனால் இங்கு கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. கடைசி நேரத்தில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற்று, மொத்தமாக தேர்தலில் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி தொடர்பாக சத்தியம் தொலைக்காட்சியின் தேர்தல் கணிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகள் குறித்த சத்தியம் தொலைக்காட்சியின் தேர்தல் கணிப்பு விவரம்,
மேட்டுப்பாளையம்: அதிமுக 41%; திமுக 38% மநீம 10% நாம் தமிழர் 4%
சூலூர்: கொ.ம.தே.க. 42%; அதிமுக 35% மநீம 12% நாம் தமிழர் 7%
கவுண்டம்பாளையம்: திமுக 48%; அதிமுக 42%; மநீம 8% ; நாம் தமிழர் 1%

கோவை வடக்கு
கோவை வடக்கு: அதிமுக 39%; திமுக 38%; மநீம- 12% நாம் தமிழர் 7% அமமுக 3%
தொண்டாமுத்தூர்: அதிமுக 44%; திமுக 40% மநீம 8% நாம் தமிழர் 3%
கோவை தெற்கு- பாஜக (வானதி சீனிவாசன்) 34%; மநீம (கமல்ஹாசன்) 34%; காங். 30%

சிங்காநல்லூர்
சிங்காநல்லூர்: அதிமுக 36%; திமுக 35%; மநீம 6% நாம் தமிழர் 4%
கிணத்துகடவு: திமுக 36%; அதிமுக 29% அமமுக 18% மநீம 6%
பொள்ளாச்சி: திமுக 44% அதிமுக 39% மநீம 7%; நாம் தமிழர் 6%;
வால்பாறை: அதிமுக 41%; இடதுசாரிகள் 36%; நாம் தமிழர் 8%; அமமுக 2%

ஒரே அளவு
இதில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக (வானதி சீனிவாசன்) 34%; மநீம (கமல்ஹாசன்) 34%; காங். 30% வாக்குகளை பெறுவார்கள். கோவை தெற்கு தொகுதியில் வானதி - கமல்ஹாசனுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு பேருமே ஒரே அளவு வாக்குகளை பெறுகிறார்.

வாக்குகள்
இதனால சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பில் யார் வெற்றிபெறுவார்கள் என்று கூறப்படவில்லை. இங்கு கடுமையான இழுபறிதான் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெறும் காங்கிரஸ் 30% வாக்குகளை மட்டுமே இங்கு பெறுகிறது.












Click it and Unblock the Notifications