பள்ளி மாணவிகளுக்கு காதல் வலை வீசி சீரழிக்கும் ஆட்டோ டிரைவர்கள் - கோவை, ஈரோட்டில் அதிர்ச்சி
ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச்சென்ற ஆட்டோ டிரைவர்களே காதல் வலை வீசி சீரழித்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவை, ஈரோட்டில் ஒரே மாதத்தில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கோவை: கோவையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பள்ளி மாணவியை காதலித்து கடத்தி சென்றுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவரை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டனர். பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் என்று தனி ஆட்டோவில் அனுப்பினால் ஆட்டோ டிரைவர்களே காதல் வலை வீசி பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பள்ளி மாணவி தினமும் பள்ளிக்கு மதியழகனின் ஆட்டோவில் சென்று வருவார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் கோவை குனியமுத்தூர் பகுதிக்கு வீடு மாறி சென்று விட்டனர். கடந்த சில தினங்களுக்கு வீட்டில் இருந்த சிறுமி மாயமானர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆட்டோ டிரைவர் மதியழகன் மீது சந்தேகப்படுவதாக கூறினார்.

கோவையின் பல பகுதிகளில் தேடி வந்த போலீசார், சிறுமியையும் ஆட்டோ டிரைவரையும் கண்டுபிடித்தனர். பள்ளிக்கு அழைத்து செல்லும் போதே காதல் வரை வீசி சிறுமியை மயக்கியிருக்கிறான். தகவல் அறிந்த பெற்றோர் வீடு மாறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு குனியமுத்தூர் பகுதிக்கு வந்த ஆட்டோ டிரைவர் மதியழகன், சிறுமியை கடத்தி சென்று விட்டான். ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதே போல ஈரோட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியை சென்னிமலை குளத்துபாளையத்தைச் சேர்ந்த ராமு என்ற ஆட்டோ டிரைவர் காதல் வலை வீசி மயக்கியுள்ளார். திருமணம் செய்வதாக கூறிய அவர், தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்திருக்கிறார். இதை சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி அவ்வப்போது அத்துமீறியுள்ளான் ஆட்டோ டிரைவர் ராமு. கோடை விடுமுறை என்பதால் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார் சிறுமி. வீட்டிற்கே சென்று மாணவியிடம் தவறாக நடந்து கொண்டார் ராமு. இதனைப் பார்த்த பெற்றோர் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பேருந்தில் பயணித்தால் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக ஆட்டோவில் அனுப்பினால் வேலியே பயிரை மேய்வதைப்போல மாணவிகளை சீரழித்துள்ளதுள்ளனர். இனி பெண் குழந்தைகளை ஆட்டோவில் அனுப்பும் பெற்றோர் சற்றே யோசித்துக்கொள்வது நல்லது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications