மனநலம் பாதித்த பெண்ணை காப்பகத்தில் சேர்த்தது நாங்க.. கனிமொழி பெயரில் விளம்பரமா?.. SDPI ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், துடியலூர் அருகே பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்த்த விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பொய்யான விளம்பரம் தேடிக் கொள்வதாக எஸ்டிபிஐ (SDPI) நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள என்ஜிஜிஓ காலனி, அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் இரவு நேரத்தில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாக துடியலூர் காவல் நிலையத்திற்குப் புகார் வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பெண்ணை காப்பாற்றிய நாய்கள்

இந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் அங்குள்ள ரயில்வே மேம்பாலம் சாலையோரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து கொண்டிருப்பதும், அப்போது, அந்த வழியாக கஞ்சா மது போதையில் வந்த இளைஞரைப் பார்த்து அங்கிருந்த 2 நாய்கள் குரைத்துக் கொண்டும் இருந்துள்ளது.

அந்த சமயத்தில் கஞ்சா மது போதையில் இருந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த நாய்கள் அவரை துரத்தி வந்து குரைத்தும், கால்களை பிடித்து இழுத்தும் பெண்ணை காப்பாற்றின. இதையடுத்து, அப்பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்த இளைஞரை நாய்கள் துரத்திச் சென்றன.

Stray Dogs Rescue Woman

கனிமொழி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற இளைஞரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இதையடுத்து, அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தான் அப்பெண்ணை காப்பகத்தில் சேர்த்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பொய்யான விளம்பரம் தேடிக் கொள்வதாக எஸ்டிபிஐ (SDPI) நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பரிந்துரைக் கடிதம்

இதுகுறித்து, SDPI நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த வாரம் துடியலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற போது தெருநாய்கள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அறிந்தவுடன் SDPI நிர்வாகிகள் உடனடியாக அப்ப பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

காவல் துறையில் புகார் அளித்து உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்க வைத்தோம். அப்பெண்ணிற்குத் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் காப்பகத்தில் சேர்க்கத் திட்டமிட்டோம். ஏற்கனவே மேட்டுப்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் அப்பெண்ணின் சகோதரி தங்கி இருந்ததால், அங்கேயே இவரையும் சேர்க்க விரும்பி கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷிடம் பரிந்துரைக் கடிதம் பெற்றோம்.

காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பெண்

ஆனால், அந்தப் பரிந்துரைக் கடிதத்துடன் மேட்டுப்பாளையம் காப்பகத்திற்குச் சென்ற போது, பிறவியிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்க்க முடியாது எனக் கூறி 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகும் கடிதத்தை நிராகரித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் SDPI கட்சி நிர்வாகிகளின் உதவியை நாடியதாகவும், அவர்களின் தொடர் முயற்சியின் பேரில் காரமடையில் உள்ள 'அன்பு மலர்' மனநல காப்பகத்தில் அப்பெண் பாதுகாப்பாகச் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

முழுக்க முழுக்க SDPI நிர்வாகிகளின் சொந்த முயற்சியால் நடந்த இந்நிகழ்வை, தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தான் நேரில் நின்று காப்பகத்தில் சேர்த்ததாகவும், த.வெ.க-வின் அறிவுறுத்தலால் தான் இது நடந்ததாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பொய்யான தகவல்களைப் பரப்பி உள்ளனர். இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. தரப்பிடம் முறையிட்டபோது, அவரது உதவியாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தவறுதலாகச் செய்தி மற்றும் புகைப்படங்கள்
பரப்பப்பட்டுவிட்டன என ஒப்புக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு உள்ளார் என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+