கோவை சூலூர் சிறுமி கொலை! தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? எஸ்டிபிஐ கண்டனம்
கோவை: கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை குறித்து எஸ்டிபிஐ கட்சி தனது கண்டன அறிக்கையில், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாத இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமும், சட்டச் சலுகைகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குப் பெருந்துணிச்சலை ஏற்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் தொடர்கதை ஆகக் காரணமாகின்றன.
வெறும் சட்டப் புத்தகங்களால் மட்டும் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது; சமரசமற்ற கடும் நடவடிக்கையும், காலதாமதமற்ற விரைவான புலனாய்வும், உறுதியான அதிரடித் தண்டனையுமே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அண்டை வீட்டைச் சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது.
பெண்களுக்கும், பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாகத் தமிழகம் மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இவ்விவகாரத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத் தரப்பட வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழக் கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications