என்று டாஸ்மாக்கில் கூட்டம் குறைந்து, இளநீர் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ.. சீமான் ஆவேசம்
பொள்ளாச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொள்ளாச்சி: "ஜாதி, மதங்களால் அரசியல் கட்சிகள் மக்களை பிளவுபடுத்தி இருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படி இல்லை. தமிழர் என்ற உணர்வுடன் அனைவரையும் அது இணைக்கும்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் பேச்சை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் திரண்டு பிரச்சாரத்துக்கு வந்து கொண்டிருப்பதால் நாம் தமிழர் கட்சி கிடுகிடுவென மக்கள் பார்வையை திசை திருப்பி வருகிறது.
ஸ்டேட் டூ சென்ட்ரல் வரை ஒருத்தரையும் மிச்சம் வைக்காமல், அதே சமயம் வஞ்சனை இல்லாமல் கொட்டி தீர்த்து விமர்சித்து வருகிறார் சீமான்.

அனல் பறந்தது
இப்படித்தான் பொள்ளாச்சியில் பிரச்சாரம் நடைபெற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த சமாச்சாரங்களால் கொதித்து போய் உள்ள பொள்ளாச்சி, சீமான் பேச்சினால் மேலும் அனல் பறந்தது! அப்போது அவர் பேசியவைகளில் ஒரு சில...

பெண்களுக்கு மதிப்பு
"சமூகம் சீர்கெட்டு இருக்கு. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுக்கெல்லாம் காரணம் நன்னெறி கல்வி இல்லாததுதான். படிக்கிற பிள்ளைகளுக்கு நீதி, ஒழுக்கத்தை கற்றுத்தரவேண்டும். பெண்களுக்கு மதிப்பு தராத எந்த இடமும் முன்னேறாது.

தரம் இல்லை
அரசு பள்ளியும், அரசு ஆஸ்பத்திரி இருந்தும் அங்கே தரமில்லை. அரசு பள்ளியில் வேலை பார்ப்பவர்களே தங்கள் பிள்ளைகளை அங்கே படிக்க வைப்பதில்லை. அரசு ஆஸ்பத்திரியில் அரசியல் தலைவர்கள் சிகிச்சைக்கு போவதில்லை.

பயங்கரவாதம்
தமிழ்நாட்டில் மரங்களையும், இயற்கையையும் பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே கிடையாது. நாடு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்களை பட்டினியினால் கொல்வதை விட பயங்கரவாதம் ஒன்றும் பெரியதல்ல.

உயர்ந்த கொள்கை
இங்கு ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி அப்படி இல்லை. தமிழர் என்ற உணர்வுடன் அனைவரையும் இணைக்கும். அதேபோல வாக்காளர்களுக்கு பணம் தருவதில்லை. ஆனால் உயர்ந்த கொள்கைகளை கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் கடை
எந்த நாட்டில் டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைந்து, இளநீர், குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ அது தான் சிறந்த நாடு" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications