தவெக மேற்கு மண்டல கூட்டத்திலேயே செங்கோட்டையன் புறக்கணிப்பு - கடுகடுத்த அருண்ராஜ்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மேற்கு மண்டல மக்களின் கருத்து கேட்பு கூட்டம் கோவையில் இன்று நடத்தினார்கள். இதில் தவெகவின் மூத்த நிர்வாகியும், மேற்கு மண்டலத்தில் உள்ள அந்தக் கட்சியின் முகமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கடுப்புடன் பதில் அளித்தார்.
தவெக மேற்கு மண்டல மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ராஜ், "இதற்கு முன்பாக மதுரை, கடலூரில் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மக்களுக்கு மற்றக் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை. விவசாயம், மகளிர், விளிம்பு நிலை மக்கள், தொழில்துறையினர், தன்னார்வலர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் எங்களை நம்புகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

கடுப்பான பதில்
தவெகவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணன் செங்கோட்டையன் தவெக பிரச்சாரக் குழுவில் முக்கிய பிரமுகராக உள்ளார். இது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள குழு. நீங்கள் தேவையில்லாமல் பிரச்சனை செய்வீர்கள் என தெரியும்" என்று பதில் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஜேசிபி பிரபாகர், "தவெகவில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் பல்வேறு குழுக்களில் பயன்படுத்திக் கொள்ள தலைவர் நினைக்கிறார். அனைவருக்கும் சம அந்தஸ்து கொடுப்பதுதான் முடிவு. யாரையும் புறக்கணிக்கும் நோக்கில் செயல்படவில்லை. எல்லோரின் திறமைகளை பயன்படுத்தி, உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜக தான் அதிமுகவுக்கு தலைமை
மீண்டும் தொடர்ந்த அருண்ராஜ், "ஒரு தலைவருக்கு முன் உதாரணமாக எங்கள் தலைவர் உள்ளார். கூட்டணிக்கு தலைமை தானாக உருவாக வேண்டும். அதை யாரும் சொல்லி உருவாக கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது டெல்லி தலைமை தான். டெல்லி தலைமை தான் முடிவு செய்து உள்ளது. அவர்களின் அழுத்தத்தால் தான் மற்ற கட்சிகள் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன. அந்தக் கூட்டத்தில் எங்கள் தலைவர் மிகவும் எதார்த்தமாக பேசியுள்ளார்.
திமுகவை வீழ்த்துவோம்
கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம். சிறுபான்மையினரை கிள்ளு கீரையாக நினைப்பது திமுகவினர்தான். கடந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்களா என்பது மக்களுக்கு தெரியும். சிறுபான்மையினரின் உண்மையான தலைவராக எங்கள் தலைவர் இருப்பார்.
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் முழுக்க முழுக்க பாரபட்சமாக இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்கள். 50,000 பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்றால் 30 நாட்களுக்கு முன்பாக அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும்.
வழிகாட்டு நெறிமுறைகள்
நிகழ்ச்சி நடைபெறும் திடல் மட்டுமல்லாமல் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு என்கிறார்கள். இது முழுக்க முழுக்க காவல்துறையும், அரசும் அவர்களது பொறுப்பை எங்கள் மீது திணிக்க பார்க்கிறார்கள். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது
இந்த விதியே தவெகவிற்காக தான் சேர்க்கப்பட்டிருக்கிறது. வேலூரில் எங்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான மனு கொடுத்த அடுத்த நாளே, முதல்வர் நிகழ்ச்சி வேலூரில் நடைபெறுகிறது என காரணம் காட்டி எங்கள் தலைவரின் நிகழ்ச்சிக்கு அனுமதியை மறுத்தனர்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications