செங்கோட்டையன் வேலுமணி சந்திப்பு.. திருமண நிகழ்ச்சியில் நீண்ட ஆலோசனை.. அதிமுகவில் அடுத்த சம்பவம்
கோவை: தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக அடுத்தடுத்து தோல்விகளால் அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கோவையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் அந்த அரசியல் பிரச்சனை ஓயவில்லை. அதிமுகவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தவெக எம்எல்ஏவாக பதவியேற்றுவிட்டனர்.

தவெக ஆதரவு நிலைப்பாடு
சிட்டிங் தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுகவின் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். மேலும் சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணையவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூறினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இப்போதுவரை அவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணையவில்லை. சத்தமில்லாமல் அவர்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் பயணிப்பதாக கூறப்பட்டது. கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில், எஸ்.பி. வேலுமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினர். இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது.
செங்கோட்டையன் வேலுமணி சந்திப்பு
அதிமுகவில் இருந்து பிரிந்த சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென வேலுமணி கோரிக்கை வைத்தார். இந்நிலையில்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டனர். அப்போது இருவரும்
நேரம் பேசிக்கொண்டனர்.
அதிமுகவில் இருந்தபோது செங்கோட்டையனும் எடப்பாடியை தீவிரமாக எதிர்த்தார். இதனால் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்பியும், தவெக மாவட்ட செயலாளருமான மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
