விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளது. நாம் தமிழர், அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. தவெக தலைவர் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இது பெரும் விமர்சனமாகியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவே 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார் என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். "தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தலைவர் உரையை கேட்கும் போது, நாடே வியக்குமளவிற்கு புதிய மறுமலர்ச்சி உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு
தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கும், தூய்மையான ஆட்சி வழங்குவதற்கும் தவெகவால் மட்டும் தான் முடியும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கின்ற அரசாக, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்ற அரசாக இருக்கும். ஆட்சியில் இருப்போர், ஆட்சியில் இருந்தோர் ஆகியோரை காட்டிலும் புதிய ஆட்சி வேண்டும் என்பது மக்களின் கனவாக இருக்கிறது. இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழகம் இருக்கும் என்கிற வகையில் அவரின் உரை அமைந்துள்ளது.
வருகிற 2026 தேர்தலில் எங்கள் தலைவர் விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மக்கள் சக்தி அவரின் பின்னால் இருக்கிறது. கோபிசெட்டிப்பாளையத்தில் 8 முறை, சத்தியமங்கலத்தில் ஒரு முறை என்று 9 முறை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறேன். தற்போது தவெகவின் கோபிசெட்டிப்பாளையம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது.
அதிமுகவில் இருந்து தூக்கி எறிந்தனர்
மக்களுக்காக நான் செய்துள்ள பணிகள், 40 வருடங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் என்னுடைய பணிகள் இருந்துள்ளது என்று நம்புகிறேன். மக்கள் சக்தியின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். பொன்ராஜ் உள்ளிட்டோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்த அடுத்த நாளே அந்த நபர் மன்னிப்பு கேட்டுள்ளார். அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறேன் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அதிமுக இயக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான். சாதாரண உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்று சரித்திர வரலாற்றில் இல்லாதளவிற்கு தூக்கி எறியப்பட்டுள்ளேன். அதனால் தான் தவெகவில் இணைந்து பணியாற்றுகிறேன். இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கட்சியை வரவேற்கிறார்கள்.
2 தொகுதிகளில் போட்டி
தலைவரின் சக்தி மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. அதை நாடே அறியும். தவெகவில் வேட்பாளர்கள் தேர்வுக்கு கஷ்டப்பட்டுள்ளார்கள் என்று எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார். நாளை காலம் மாறும். மக்கள் தீர்ப்பால் வேலுமணி என்ன கருதுகிறாரோ, அந்த கருத்துக்கள் அனைத்தும் தூள் தூளாக்கப்படும். விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவதையும் விமர்சிக்கிறார்கள். வரலாற்றில் பல தலைவர்களும் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். ஜெயலலிதா உள்ளிட்டோர் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். இதில் தவறு இல்லை" என்றார்.
-
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்! -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
செங்கோட்டையன் உறவினருக்கு எல்லாம் சீட் இல்லை.. கடுகடுத்த எடப்பாடி.. அப்செட்டில் அதிமுக எம்எல்ஏ












Click it and Unblock the Notifications