Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக- காங்கிரஸ் கூட்டணி? விஜய்- பிரவீன் சக்கரவர்த்தி பேசினாங்களே! ஆனா செங்கோட்டையன் சொல்றதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

கோபி: அதிமுகவில் இருந்து விரைவில் முக்கிய புள்ளிகள் இணையவுள்ளார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அது போல் தவெக காங்கிரஸ் கூட்டணியா என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

Sengottaiyan

கோபிசெட்டிபாளையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஓபிஎஸ்ஸை பொருத்தமட்டில் அவரது ஆதரவாளர்களுடன் கடந்த 23 ஆம் தேதி நடத்திய ஆலோசனையின் போது தேர்தல் கூட்டணி குறித்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைய போவதில்லை. துரோகத்திற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என ஓபிஎஸ் தரப்பினர் முடிவு எடுத்துள்ளனர். எனவே ஓபிஎஸ் விரைவில் நல்ல முடிவுகள எடுப்பார்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணிக்கு செல்வது போன்ற கருத்துகள் ஏதும் இல்லை. ஆனால் இணைய வேண்டிய இடத்தில் இணைவோம். அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தவெகவில் இணைவார்கள். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறோம்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடன் பேசிக் கொண்டு இருப்பது உண்மை. அதே நேரத்தில் அவர்கள் எப்போது முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

தவெகவில் நல்ல முடிவுகள்

தவெகவில் என்னை போன்றவர்களுடன் அவர்கள் தரப்பிலும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். கொங்கு மண்டலத்தை யார் பிடிக்கிறார்கள் என்பதை தேர்தல் களத்தில் பார்க்கலாம்.

விஜய்யுடன் பயணம்

இந்த மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாகை சூடும். எனது அரசியல் பயணத்தை பொருத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்ததை போல் விஜயுடனான பயணமும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜனநாயகன்

விஜய்க்கு வரும் 27,28 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நிகழ்ச்சிகள் (ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா) இருக்கின்றன. அதன் பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.

மலேசியாவில் கட்டுப்பாடுகள்

மலேசியாவில் வரும் 27 ஆம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் யாரும் அரசியல் பேசக் கூடாது, ரசிகர்கள் கட்சி கொடி, கட்சி கொடி பொருத்திய டீசர்ட் அணிந்து வரக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை மலேசியா அரசு விதித்துள்ளது.

விஜய் உறுதி

இதுகுறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டனர். அதற்கு அவர், கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்கப்படுகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி மக்கள் மனதில் விஜய் உறுதியாக இருக்கிறார். மக்களால் விஜய் 2026 ஆம் ஆண்டு ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணி

ராகுலுக்கு நெருக்கமானவரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். இவர்கள் கூட்டணி பேசினார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் பிரவீன், இருவரும் இட்லி, தோசை சாப்பிட்டதாக தெரிவித்தார். அது போல் எஸ்ஏ சந்திரசேகரை திருச்சி வேலுச்சாமி போன்றோர் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால் தவெக- காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பதை போல் செங்கோட்டையன் கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

4 முனை போட்டி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய 4 முனை போட்டி நிலவும். இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல் கட்சிகள் பாடுபட்டு வருகின்றன. இதற்காக மாவட்டந்தோறும் சென்று பொதுக் கூட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+