வாட்ஸப்பில் வந்த "போட்டோ".. கோவையை புரட்டிய "கார்த்தி"! செந்தில் பாலாஜி சாய்ஸ் சும்மாவா? மிரண்ட பாஜக
கோயம்புத்தூர்: நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்று அதிமுக, பாஜகவை ஒரு சேர திரும்பி பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவில் உட்கட்சி தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டன.
இனி தலைவர், பொதுச்செயலாளர் போன்ற பதவிக்கு மட்டுமே அடையாள தேர்தல் நடத்த வேண்டும். மற்றபடி மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

மாவட்ட செயலாளர்கள்
இந்த மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். அதாவது ஒரே பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டால் கூட, அதில் ஒருவரிடம் பேசி சமாதானம் செய்து, போட்டியில் இருந்து வாபஸ் வாங்க வைத்தனர். கிட்டத்தட்ட 90 சதவிகித போஸ்ட்கள் அன் அப்போஸ்ட் வெற்றி என்றுதான் கூறப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் போட்டி நிலவியது. போட்டி சுமுகமாக முடிந்துவிட்டாலும் கூட சில இடங்களில் மாவட்ட செயலாளர்கள் தேர்வில் புகைச்சல்கள் இருக்கிறதாம். வரும் பொதுக்குழுவில் இந்த புகைச்சல்கள் பேசி தீர்க்கப்படும் என்கிறார்கள்.

என்ன நடந்தது?
இந்த தேர்தலில் கோவையில்தான் அதிரடி மாற்றங்கள் நடந்த. கோவையில் 5 ஆக இருந்த அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 3 ஆக குறைக்கப்பட்டது. அதோடு கோவை மாநகர் மாவட்டத்திற்கு கார்த்திக்கும், கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவியும் மாவட்ட செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மூவருமே செந்தில் பாலாஜியின் நேரடி சாய்ஸ். இங்கே மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் ப்ரீ ஹேண்ட் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை செந்தில் பாலாஜி சரியாக பயன்படுத்தி மூன்று பேரையும் டிக் அடித்துள்ளார்.

டிக் அடித்தார்
நீங்கள்தான் கண்டிப்பாக மாவட்ட செயலாளர்கள் என்று முன் கூட்டியே சொல்லி, இவர்களை போட்டியின்றி வெற்றிபெற வைத்து இருக்கிறார். இந்த நிலையில்தான் மாநகர் மாவட்ட செயலாளராக தேர்வாகி உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி கோவையில் தனது பவரை காட்டினார். நேற்று கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாராக பொறுப்பேற்றுக்கொண்ட அவர்.. அதன்பின் காந்திபுரத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு வந்து மரியாதை செய்தார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆகியோருக்கு இந்த நிகழ்வில் கார்த்தி நன்றி சொன்னார்.

கார்த்தி
இந்த சம்பவம்தான் கோவையை திரும்பி பார்க்க வைத்துள்ளது. சாதாரண மரியாதை செய்யும் நிகழ்விற்கே நேற்று மிகப்பெரிய அளவில் கார்த்தி கூட்டத்தை கூட்டி இருந்தார். எதிர்பார்க்காத அளவிற்கு காந்திபுரம் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த சாலை முழுக்க முடங்கும் அளவிற்கு கூட்டம் இருந்தது. பெரிய பொதுக்கூட்டங்களில் வரும் கூட்டம் போல ஒரு மாலை அணிவிக்கும் நிகழ்விற்கு கார்த்தி ஆள் சேர்த்தது பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலில் கோவையில் கண்டிப்பாக திமுக வெல்லும்.

திமுக
அதற்கான உறுதியை நான் தருகிறேன் என்று முதல்வரிடம் சொல்லித்தான் செந்தில் பாலாஜி இந்த 3 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி சாய்ஸ் தவறாகவில்லை என்று உறுதிப்படுத்தும் விதமாக ஆட்களை திரட்டி இவர்கிறார் கார்த்தி என்று திமுகவினர் குதூகலிக்கிறார்கள். கோவையை பாஜக அதிமுக தீவிரமாக குறி வைத்து வருகிறது. இந்த நிலையில்தான் கார்த்தி கூட்டிய கூட்டம் இரண்டு கட்சிகளையும் ஒரு சேர திரும்பி பார்க்க வைத்துள்ளதாம்.
அதோடு பாஜக, அதிமுக வாட்ஸப் குழுக்களில் வரிசையாக இந்த கூட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து.. சின்ன நிகழ்விற்கே இப்படி கூட்டம் சேர்கிறார்களே.. நாமளும் இப்படி மாஸ் காட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்களாம் உள்ளூர் தலைகள்!
-
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications