கரூருக்கு குட் பை.. கோவையில் களமிறங்கும் செந்தில் பாலாஜி.. ஸ்டாலின் போட்ட சரியான ஸ்கெட்ச்!
கோவை: சட்டசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இம்முறை கரூர் மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு இடம்பெயர முடிவு செய்துள்ளதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர். அந்த வகையில் கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு கொங்கு மண்டலம் மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுகவால் வெல்ல முடியவில்லை. இதன்பின் செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட போதும், கோவை மாவட்ட பொறுப்பு செந்தில் பாலாஜி வசமே உள்ளது.

இம்முறை கோவையில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளது. செந்தில் பாலாஜி மீதும் முழு நம்பிக்கை கொண்டுள்ளதால், அவர் பரிந்துரைக்கும் அத்தனை விஷயங்களுக்கும் எந்தவித எதிர்ப்பும் திமுக தலைமை கூறுவதில்லை. அதற்கேற்ப செந்தில் பாலாஜியும் கொடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்கிறார்.
கோவையில் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜியின் பணிகளால் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, சட்டசபைத் தேர்தலிலும் கிடைக்க வேண்டும் என்பதால் பம்பரமாக சுழன்று வருகிறார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தன்னுடைய தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டமே மாற முடிவு செய்திருக்கிறார்.
கடந்த தேர்தலில் கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக போட்டியிட்ட செந்தில் பாலாஜி, சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை திமுக ஆட்சி மீதான அதிருப்தி காரணமாக தனது வெற்றியில் பாதிப்புகள் இருக்கலாம் என்றும் செந்தில் பாலாஜி கருதுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் கரூரில் இருந்து கோவை மாவட்டத்தில் போட்டியிட செந்தில் பாலாஜி முடிவு எடுத்திருக்கிறார். அதற்காக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட செந்தில் பாலாஜி முடிவு எடுத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை கமல்ஹாசன் போட்டியிட்டு சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் செந்தில் பாலாஜி செய்துள்ள பணிகள் மற்றும் சமூக ரீதியிலான வாக்குகள் தனக்கு சாதகமாக இருக்கும் என்று செந்தில் பாலாஜி கணக்கு போட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த முறை கமல்ஹாசனுக்காக பணியாற்றிய மகேந்திரனும் இம்முறை திமுகவில் தான் இருக்கிறார். இவர் மூலமாக பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது திமுக தலைமைக்கும் கூடுதல் உற்சாகம் தான். ஏனென்றால் கரூரில் போட்டியிட்டால் செந்தில் பாலாஜியால் கோவையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாது. இதனால் கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதன் மூலமாக சக திமுகவினரும் பணிகளை தீவிரமாக செய்வார்கள் என்று கணித்திருக்கிறது.
-
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?












Click it and Unblock the Notifications