Senthil Balaji: கோவை மக்களுக்கு செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ்.. அதிமுகவுக்கு போட்டியாக இறங்கும் பரிசுகள்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோவையில் அதிமுவினர் தொகுதி வாரியாக பரிசு பொருட்களை விநோயகம் செய்கிறார்கள். வேலுமணியின் செக்குக்கு, செக் மேட் வைக்கும் வகையில், செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ் பரிசுகளை வழங்கவுள்ளாராம்.
தமிழக அரசியலில் முன்பெல்லாம் இடைத்தேர்தல்களுக்கு தான் பரிசுகளும், பணமும் கொட்டும். இப்போது சட்டமன்ற தேர்தலிலேயே பரிசு, பணம் கலாச்சாரம் தலை தூக்க தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் கவனம் செலுத்தும் தொகுதிகளில் இப்போதே பரிசுகளை வாரி இரைக்க தொடங்கிவிட்டனர். கொங்கு மண்டல அரசியல் தான் அனல் பறக்கிறது. அதிமுக கோட்டையான கோவையில், திமுக ஓட்டை போடும் வேலையை செய்து வருகிறது.

SP வேலுமணியின் வியூகம்
அதிமுகவின் கொங்கு மண்டல முக்கிய தளபதி எஸ்.பி. வேலுமணியின் வியூகங்களை தகர்க்க திமுக சார்பில் அவர்களின் கொங்கு மண்டல தளபதி செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளாது. கடந்த 2022 உள்ளாட்சி தேர்தலில் கோவையில் திமுக ஹாட் பாக்ஸ், கொலுசு உள்ளிட்ட பரிசுகளை இறக்கியிருந்தது. இதில் அதிமுக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட அதிமுக, 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளை விநியோகம் செய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் சுமார் 3,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 1,000 - 1,200 வாக்காளர்கள் உள்ளனர். நாங்கள் ஒரு பூத்துக்கு சராசரியாக 250 - 300 குடும்பங்களாக பிரித்து பரிசுப் பொருள்களை வழங்கி வருகிறோம். மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் ஹாட்பாக்ஸ் மற்றும் பெரிய சில்வர் தட்டு வழங்கி வருகிறோம். இதற்காக 10 லட்சம் ஹாட் பாக்ஸ்கள் மற்றும் சில்வர் தட்டுகள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளோம்.
வேட்டி, சேலை, குடை
தொகுதிக்கு சராசரியாக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இந்தப் பரிசுப் பொருள்களை வழங்கவுள்ளோம். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் ஸ்பெஷலாக வேட்டி, சட்டை, சேலை, ஃபிளாஷ்க், குடை என மொத்தம் 6 வகையான பொருள்கள் வழங்கப்படுகின்றன. திமுக மகளிர் உரிமை தொகை ரூ.5,000 மூலம் எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்தது. ஆனால் வேலுமணி சத்தமே இல்லாமல் பரிசு பொருட்களை இறக்கி அதிமுகவின் மீது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றி தனது அதிமுக செல்வாக்கை தக்க வைக்க காய் நகர்த்தி வருகிறார். வேலுமணியின் இந்த மூவால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க செந்தில் பாலாஜி பயங்கரமாக திட்டமிட்டு வருகிறாராம். இதுகுறித்து கோவை திமுகவினர் கூறுகையில், "அதிமுகவினர் வழங்கும் பரிசுப் பொருளின் மதிப்பு சராசரியாக ரூ.500 -1,000 தான் வரும்.
செந்தில்பாலாஜி டிவிஸ்ட் [Senthil Balaji]
நாளை மார்ச் 1 ஆம் தேதி முதலைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி கோவையில் ரூ.2,000 மதிப்பிலான பரிசுப் பொருள்களை விநியோகம் திட்டமிட்டுள்ளோம். அண்டா, வெள்ளி நாணயம் உள்ளிட்டவை பரிசுப் பொருள்களாக கொடுக்கவுள்ளோம். இதற்கான லிஸ்டும் பக்காவாக தயார் செய்துவிட்டோம். செந்தில் பாலாஜி எப்படி சிந்திக்கிறார் என்பதை யாராலும் எளிதில் கணிக்க முடியாது.
கடந்த 2022 உள்ளாட்சி தேர்தலின்போது, சீனியர் நிர்வாகிகளுக்கே தெரியாமல் தான் கடைசி நேரத்தில் ஹாட் பாக்ஸ் மற்றும் கொலுசு வீடு வீடாக பரிசாக கொடுத்தனர். அது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படி இந்த முறையும் சர்ப்ரைஸாக வேறு பரிசுப் பொருட்களை இறக்கவும் திட்டமிட்டு வருகிறார். ஒரு தொகுதிக்கு சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு பரிசு வழங்க திட்டமிட்டுள்ளோம். தேர்தலுக்கு பிறகு கோவை அதிமுக கோட்டை என்கிற நிலை மாறி, திமுக கோட்டையாக மாறும்" என்றார்.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?












Click it and Unblock the Notifications