அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா?
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களம் மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் அவர் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் யாரும் எதிர்பாராத இடம். இதனால் அதிமுக அதிர்ச்சியில் உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். தவெக மட்டும் தான் களத்தில் மந்தமாக உள்ளது. திமுக கூட்டணி அரசு பலத்துடன் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற டார்கெட்டுடன் திமுக பணியாற்றி வருகிறது.

வெளியூர் வேட்பாளர் விமர்சனம்
அவர்களுக்கு பெரியளவுக்கு கைக்கொடுக்காத கொங்கு மண்டலத்தில் இந்தமுறை திமுக அதிக கவனம் செலத்துகிறது. கோவையில் தங்களின் வெற்றியை உறுதிபடுத்துவதற்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை இறக்கியுள்ளனர். சொந்த ஊரான கரூரில் இருந்து, அதிமுக வலுவாக உள்ள கோவைக்கு வந்துள்ளது செந்தில் பாலாஜி எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க். செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல், கோவை முழுவதும் திமுகவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் செந்தில் பாலாஜி இருக்கிறார்.
இதுதவிர அவர் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார். அதனால் அவர் பொறுப்புள்ள தொகுதிகளுக்கும் செந்தில் பாலாஜி பயணம் செய்கிறார். செந்தில் பாலாஜி வெளியூரைச் சேர்ந்தவர் என்கிற பிரச்சாரத்தை அதிமுக, பாஜக முன் வைக்கிறது. இதை உடைப்பதற்கு செந்தில் பாலாஜி பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறார். அதிமுக வேட்பாளரும் வெளியூரில் இருந்து வந்தவர் தான் என்று அவர் விமர்சனம் செய்கிறார்.
கோவை தெற்கில் செந்தில் பாலாஜி
ஏற்கனவே கோவை கொடிசியா வளாகம் அருகே செந்தில் பாலாஜிக்கு ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதிக்குள் குடியேற செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செந்தில் பாலாஜி, "நான் கடந்த 5 வருடங்களாக கோவையில் உங்களுடன் பயணிக்கிறேன். புதியவன் இல்லை. இந்த ஊரைப் பற்றியும், பிரச்சனைகள் பற்றியும் நன்கறிவேன்.
என்னை எங்கு சந்திப்பது என்று பலரும் யோசிக்கலாம். ஏற்கனவே ஒரு வீடும் உள்ளது. ஆனால் கோவை தெற்கு தொகுதியில் குடியேற திட்டமிட்டுள்ளேன். வீடு பார்த்து கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். செந்தில் பாலாஜி ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீடு பார்த்துள்ளதாக திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications