முதலமைச்சரை வரவேற்க; 1 லட்சம் பேர் திரள வேண்டும்; செந்தில்பாலாஜி அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

கோவை: வரும் 22-ம் தேதி கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சுமார் 1 லட்சம் பேராவது திரள வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்திருக்கிறார்.

கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி இதனைக் கூறியிருக்கிறார்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்றும் கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்பமனு கொடுக்க தொடங்கலாம் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார்.

Senthilbalaji calls for 1 lakh cadres to gather to welcome the Chief Minister

கோவை மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என மொத்தம் 775 வார்டுகளும் 2,298 வாக்குச்சாவடிகளும் உள்ளதாகவும் திமுக சார்பில் வாக்குச்சாவடி ஒன்றுக்கு 12 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

எதிரிகள் தான் திமுகவினரை பார்த்து அச்சப்பட வேண்டுமே தவிர திமுகவினர் எதிரிகளை பார்த்து அச்சப்படக்கூடாது என தைரியம் அளித்திருக்கிறார். நாம் ஆளுங்கட்சியாக இருப்பதால் அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் தேர்தல் பணிகளில் குளறுபடிகள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

வார்டு பொறுப்பாளர்கள் வீடு வாரியாக சென்று மக்களை சந்திப்பதோடு அவர்களின் அரசு சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்று அதை நிறைவேற்றிக் கொடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுவதை வைத்து பார்க்கும் போதும், விருப்பமனு கொடுக்கலாம் என அறிவித்திருப்பதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. கோவை மாவட்ட திமுக செயற்குழுவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டாலும் அவரது பேச்சைக் காட்டிலும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பேச்சில் தான் அனல் பறந்தது.

இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சற்றும் சளைக்காத வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதுடன் மேயர் பதவியை கைப்பற்றுவதற்கான வியூகத்தை ரகசியம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+