அண்ணாமலை விவாதம் செய்ய தயாரா?.. மேடை போட்டு பேசலாம்.. சவால்விட்ட சிங்கை ராமச்சந்திரன்
கோவை: அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை கூறுகிறாரென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது அது தெரியவில்லையா. 20 ஆயிரம் புத்தகம் படித்தவரிடம் அனைத்து கேள்விகளுக்கும் விடையிருக்க வேண்டும். விவாதத்திற்கு வாருங்கள். மேடை போட்டு பேசலாம் என்று சிங்கை ராமச்சந்திரன் சவால்விட்டுள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவைப் பற்றி பேசினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. கருணாநிதி நாணயம் எதற்கு வெளியிட்டார்கள் என்றுகூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிட்டது மத்திய அரசுக்குதான் பெருமை.

அண்ணாமலையிடம் யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பதற்றம் வந்துவிடுகிறது. பயப்படக் கூடியவர்கள்தான் பதற்றம் அடைவார்கள். அண்ணாமலையின் தந்தையார் அரசியலில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரது தந்தையை தரக்குறைவாகப் பேசினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும்போது எடப்பாடியார், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் அண்ணா அண்ணா என்று கெஞ்சிக் கொண்டிருந்தவர் தான் அண்ணாமலை.
திருச்சி சூர்யா அண்ணாமலை செய்தது பற்றி பேசி கிழித்து வருகிறார். அண்ணாமலை பேசுவதில் அதிக பொய்கள் இருக்கின்றன. மானமுள்ள விவசாயி மகன் என்றால் 2021 ஆம் ஆண்டு எடப்பாடியார் பின்னால் நின்ற அண்ணாமலை எங்கே போனார்? என கேள்வி எழுப்பினார். கோ பேக் மோடி என்று திமுக தொடர்ந்து டிரெண்ட் செய்து வருகிறது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை சேர்ந்த ஒருவரை எதற்காக அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.
டிஎம்கே ஃபைல்ஸ் என்று வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை வெட்கமே இல்லாமல் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொண்டார். அண்ணாமலையே விவசாய நிலத்தை விற்றுக் கொண்டு இருக்கிறார். ஆனால், தான் விவசாயி மகன் என்று கூறி கொள்கிறார். ஐபிஎஸ் பணியில் இருக்கும் போது எப்படி இத்தனை சொத்துக்கள் வந்தன. கவுன்சிலர் ஆவதற்கு கூட துப்பில்லாதவருக்கே இத்தனை சொத்துக்கள் என்றால் பதவி வந்தால் என்ன ஆகும்.
உண்மையான ஆண்மகன் என்றால் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள். மேடை போட்டு பேசலாம். அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை கூறுகிறாரென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பொழுது அது தெரியவில்லையா. 20 ஆயிரம் புத்தகம் படித்தவரிடம் அனைத்து கேள்விகளுக்கும் விடையிருக்க வேண்டும்.
அண்ணாமலை பற்றியும், பாஜக பற்றியும், திராவிட கட்சிகள் பற்றியும், மோடிக்கும் அமித்ஷாவிற்கும் புரிந்து கொள்ளும்படி ஹிந்தி மொழியில் பேசினார். அண்ணாமலை கட்சித் தலைவர் இல்லை. யூடியூப் இன்புளூயென்ஸர். பொய் சொல்ல கூச்சமே படாதவர். அகந்தை, தலைக்கனம், திமிரு இவற்றுக்கு பெயர் போனவர் அண்ணாமலை.
தந்தையுடன் சேர்ந்து மண்வெட்டி பிடித்த கை இன்னும் காப்பு இருக்கிறது என்று அண்ணாமலை கூறுகிறார். மண்வெட்டி பிடித்து என்ன வேலை செய்தார் என்று பார்க்கிறேன் வரட்டும் ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்து என்று சவால் விடுத்தார். அண்ணாமலைக்கு முகவரியே இல்லை, காலையில் எழுந்தால் அவருக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது.
முடிந்தால் பாஜகவில் உள்ளவர்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிமுகவில் இருந்து யாரும் வரமாட்டார்கள். லண்டனுக்கு அண்ணாமலை படிக்க செல்கிறேன் என்று கூறுவது ஒரு பிம்பம்தான். முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்தான கேள்விக்கு இதற்கு முன்பு முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று எத்தனை நேரடி முதலீட்டை ஈட்டி வந்துள்ளார் என்று கூறிவிட்டு செல்லலாம். முதல்வர் இங்கு இருந்தாலே இல்லாதது போன்று தான் உள்ளது என்றார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications