என்ன அழகு எத்தனை அழகு! பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட்டான சிறுவாணி வனம்.. சிறப்புகள் என்ன?
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி வனச்சரகத்தில் பட்டாம்பூச்சியில் உள்ள இனங்களில் 74 சதவீத இனங்கள் இங்கு காணப்படுகிறது. இது கிட்டதட்ட பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட் என சொல்லலாம்.
ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரும் மறுபுறம் நீலகிரி காடுகளும் என ரம்மியமான இதமான புவியியல் அமைப்பை கொண்டது கோவை. இதனால் இந்த மாவட்டத்தில் வனப்பகுதிகளும் நிறைய உள்ளன. அந்த வகையில் இங்கு சிறுவாணி நீர் வீழ்ச்சி, சிறுவாணி அணை உள்ளிட்டவையை சுற்றி வனப்பகுதி காணப்படுகிறது. இது சிறுவாணி வனச்சரகம் என அழைக்கப்படுகிறது.
இந்த காடுகள் கோவை வனப்பிரிவில் உள்ள பொளுவாம்பட்டி வனச்சரகத்தின் ஒரு பகுதியாகும். நொய்யல் ஆறு உருவாகும் வெள்ளியங்கி மலைகளின் உயர்ந்த குன்றுகளும் சிறுவாணி காட்டில் உள்ளது. பொதுவாக காடுகள் என்றால் புழு, பூச்சிகள், விலங்குகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்டவை காணப்படும்.

அழகு
அதிலும் அழகு, மென்மை, மகிழ்ச்சிக்கு உருவகமாக பார்க்கப்படும் பட்டாம்பூச்சி இந்த பகுதிகளில் இருக்கிறது. ஆம். இந்த சிறுவாணி காட்டு பகுதியில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. தமிழகத்தில் தோராயமாக 325 வகைகளை சேர்ந்த பட்டாம்பூச்சிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

240 பட்டாம்பூச்சி இனங்கள்
அவற்றில் சுமார் 240 பட்டாம்பூச்சி இனங்கள், அதாவது மொத்த எண்ணிக்கை 74 சதவீதம் இங்கு காணப்படுகிறது. அந்த 240 இல் 6 குடும்பங்கள் உள்ளன. ஸ்வாலோடெய்ல் எனப்படும் இனத்தை சேர்ந்த 17 பட்டாம்பூச்சிகளும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தினாலான 28 பூச்சிகளும் பிரஷ் ஃபூட்டட் பட்டர்பிளைஸ் 72, ப்ளூஸ் 69, மெட்டல்மார்க்ஸ் 1 மற்றும் ஸ்கிப்பர்கள் 53 உள்ளன.

வனத்துறை
இந்த பட்டாம்பூச்சிகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வனத்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டது. சாடிவயல் சோதனைச் சாவடி முதல் கோவை குற்றாலம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழக கேரள எல்லை வரை களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ. சுற்றளவில் குறைந்தது 75 வகையான பட்டாம்பூச்சிகள் தென்பட்டது. சுருக்கமாக இது பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட் என சொல்லலாம்.

அரிதானவை
சிறுவாணியில் அரிதாக காணப்படும் நீலகிரி கிராஸ் யெல்லோ, பிளைன் ஃபபின், லெஸ்ஸர் கல், சாக்லேட் ஆல்பட்ரோஸ் டானி ராஜா உள்ளிட்டவை காணப்படுகிறது. இவவாறு பட்டாம்பூச்சிகள் அதிகளவில் காணப்படுவது தாவரங்களின் வளத்தை எடுத்துக் காட்டுகிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications