லைஃப்ல மறக்க மாட்டேன்..நான் இப்போ நல்லா இருக்க ‘அவங்க’ தான் காரணம்! உடைத்துப் பேசிய சிவகார்த்திகேயன்

Subscribe to Oneindia Tamil

கோவை: கல்லூரிக் காலத்தில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன் எனவும், கல்லூரி நண்பர்களுடன் இன்றும் இணைந்தே பயணிப்பதாக கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். சந்தானம், யோகி பாபு, ராஜு என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அவர்களுள் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கல்லூரி காலத்தில் மிமிக்கிரி செய்து வந்த அவர் தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து வெற்றிகரமான ஆங்கராக பிரபலமான அவர் திரைத்துறையிலும் நுழைந்தார்.

Sivakarthikeyan Emotional Speech

சிவகார்த்திகேயன்

அடுத்தடுத்து வெற்றிப் படங்களால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது அவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக 'மதராஸி' படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மதராசி படம்

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில் நடைபெற்றது.

அனிருத்

இந்நிகழ்ச்சியில் படத்தின் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்குமணி ஆகியோர் கலந்துகொண்டு படத்தில் நடித்த அனுபவங்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் வாயிலாக, மாணவ மாணவியர் மத்தியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "மதராஸி படம் சிறப்பாக வந்துள்ளது. 3 வருடங்களுக்குப் பிறகு நானும் அனிருத்தும் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளோம்.

கல்லூரி நண்பர்கள்

கல்லூரி காலத்தில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களால்தான், இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன். கல்லூரி நண்பர்களுடன் இன்றும் இணைந்தே பயணிக்கிறேன். ஒரு மேஜிக் ரிமோட் கிடைத்தால் கல்லூரி நாட்களுக்கே திரும்பிப் போவேன். பின் வரிசையில் உட்கார்ந்து நண்பர்களோடு கிண்டல் செய்த நாட்களுக்கே போவேன். மனித வாழ்க்கையில் காதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோலத்தான், இந்தப் படத்திலும் காதலை மையமாக வைத்து திரைக்கதையைத் தேர்வு செய்து படமாக எடுத்துள்ளோம்.

ரஜினிகாந்த்

ஆக்சன் சீன்களில் உடம்பு வலி ஏற்படும். காதல் காட்சிகள் மனதில் வலிக்க வைக்கும். ஆனால் எனக்கு மனதில் ஏற்படும் வலி பிடிக்கும். அதனால் லவ் சீன்ஸ் தான் பிடிக்கும்" என்றார். தொடர்ந்து "உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?" என மாணவர்கள் கேட்ட நிலையில், "எனக்குப் பிடித்த நடிகர் எப்போதுமே நம் தலைவர் ரஜினிகாந்த்தான்.. பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+