கோவையில் சென்னையை போல் நடந்த மாற்றம்.. தாம்பரமாகும் மேட்டுப்பாளையம்.. கனவை நிஜமாக்கிய ரயில்வே
கோவை: கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரயில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன் முழு நேர விவரத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
கோவை மக்களின் பல வருட கனவு நிறைவேறி உள்ளது. மேட்டுப்பாளையம்- கோவை இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோவையின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு நல்ல பயனாக இருக்க போகிறது. சென்னையில் எப்படி தாம்பரத்திற்கு அடிக்கடி மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறதோ, அதுபோல் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மெமு ரயில் இனி அடிக்கடி இயக்கப்பட வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

கோவை தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சுக்கு அலைந்து, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது இனி குறையப்போகிறது. அதேநேரம் மேட்டுப்பாளையம்- கோவை இடையே இருவழிப்பாதை உருவாக்கப்பட்டால், அடிக்கடி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்பதால், கோவை மேட்டுப்பாளையம் இடையே மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் கோவை போத்தனூர்- மேட்டுப்பாளையம் இடையே செல்லும் மெமு ரயில்களின் நேர விவரங்களை பார்ப்போம்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் போத்தனூர் ரயில்கள் நேர அட்டவணை: ரயில் எண்:- 06009 மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படுகிறது. அந்த ரெயில் காரமடைக்கு காலை 8.30 மணிக்கு வந்து, 8.31 மணிக்கு புறப்படுகிறது. பெரியநாயக்கன் பாளையத்துக்கு 8.38 மணிக்கும், துடியலூருக்கு 8.44 மணிக்கும், வடகோவைக்கு 8.49 மணிக்கும், கோவை ரயில்நிலையத்துக்கு 9.02 மணிக்கும், போத்தனூருக்கு 9.30 மணிக்கும் வந்தடைகிறது.
ரயில் எண்:- 06815 மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 1.05 மணிக்கு புறப்படுகிறது. காரமடைக்கு 1.14 மணிக்கும், பெரிய நாயக்கன்பாளையத்துக்கு 1.24 மணிக்கும், துடியலூருக்கு 1.29 மணிக்கும், வடகோவைக்கு 1.34 மணிக்கும், கோவை ரெயில் நிலையத்துக்கு 2.07 மணிக்கும், போத்தனூருக்கு 2.30 மணிக்கும் வந்தடைகிறது.
ரயில் எண்:- 06823 மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 6.55 மணிக்கு புறப்படுகிறது. அது இரவு 7.04 மணிக்கு காரமடைக்கும், பெரியநாயக்கன்பாளையத்துக்கு 7.14 மணிக்கும், துடியலூருக்கு 7.19 மணிக்கும், வடகோவைக்கு 7.24 மணிக்கும், கோவை ரெயில் நிலையத்துக்கு 7.32 மணிக்கும்,போத்தனூருக்கு 8 மணிக்கும் வந்தடைகிறது.
கோவை போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள்: ரயில் எண்:- 06812 போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படுகிறது. அது 9.52 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக் கும், காலை 10.01 மணிக்கு வடகோவைக்கும், 10.06 மணிக்கு துடியலூருக்கும், 10.11 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்துக்கும், 10.21 மணிக்கு காரமடைக்கும், 10.45 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கும் சென்றடைகிறது.
ரயில் எண்:- 06816 போத்தனூரில் இருந்து பகல் 3.30 மணிக்கு புறப்படுகிறது. அது 3.42 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக் கும், 3.51 மணிக்கு வடகோவைக்கும், 3.56 மணிக்கு துடியலூருக்கும், பெரியநாயக்கன்பாளையத்துக்கு 4.01 மணிக்கும், காரமடைக்கு 4.11 மணிக்கும், மேட்டுப்பாளையத்துக்கு மாலை 4.30 மணிக்கும் சென்றடைகிறது.
ரயில் எண்:- 06822 போத்தனூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படுகிறது. அது இரவு 8.25 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக்கும், 8.33 மணிக்கு வடகோவைக்கும், 8.39 மணிக்கு துடியலூருக்கும், 8.44 மணிக்கு பெரிநாயக்கன்பாளையத்துக்கும், 8.54 மணிக்கு காரமடைக்கும், 9.15 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கும் சென்றடைகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications