இது லிஸ்ட்லயே இல்லையே.. தொண்டாமுத்தூர் மக்களுக்கு வேலுமணி சர்ப்ரைஸ் பரிசு
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோவையில் அதிமுவினர் தொகுதி வாரியாக பரிசு பொருட்களை விநோயகம் செய்தனர். இந்நிலையில் அடுத்த சர்ப்ரைஸாக வேலுமணி சார்பில் தன்னுடைய தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு டிரம்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் கவனம் செலுத்தும் தொகுதிகளில் இப்போதே பரிசுகளை இறக்கி அதிரடி காட்ட தொடங்கிவிட்டனர்.

கோவை பரிசு பொருட்கள்
இந்த பரிசு கலாச்சாரம் கொங்கு மண்டல அரசியல் தான் அதிகம் பரவி வருகிறது. அதிமுக கோட்டையான கோவையில், திமுக ஓட்டை போடும் வேலையை செய்து வருகிறது. அதிமுகவின் கொங்கு மண்டல முக்கிய தளபதி எஸ்.பி. வேலுமணியின் வியூகங்களை தகர்க்க திமுக சார்பில் அவர்களின் கொங்கு மண்டல தளபதி செந்தில் பாலாஜி களமிறக்கியுள்ளது.
கடந்த 2022 உள்ளாட்சி தேர்தலில் கோவையில் திமுக ஹாட் பாக்ஸ், கொலுசு உள்ளிட்ட பரிசுகளை இறக்கியிருந்தது. இதில் அதிமுக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட அதிமுக, 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளை விநியோகம் செய்தது.
திமுகவும் மெகா பிளான்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் ஹாட்பாக்ஸ் மற்றும் பெரிய சில்வர் தட்டு வழங்கினர். மொத்தம் 10 லட்சம் ஹாட் பாக்ஸ்கள், 10 லட்சம் சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டன. எஸ்.பி. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் ஸ்பெஷலாக ஹாட்பாக்ஸ், தட்டு ஆகியவற்றுடன் வேட்டி, சட்டை, சேலை, ஃபிளாஷ்க், குடை என மொத்தம் 6 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.
திமுக சார்பில் மகளிர் உரிமை தொகை ரூ.5,000 வழங்கி எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்தது. கோவையில் வேலுமணி சத்தமே இல்லாமல் பரிசு பொருட்களை இறக்கி மக்களை அதிமுக நோக்கி வர அதிரடிகளை அறிவித்து வருகிறார். திமுக சார்பில் கோவை மக்களுக்கு செந்தில் பாலாஜியும் பரிசு பொருட்களை இறக்க திட்டமிட்டு வருகிறார்.
வேலுமணி சர்ப்ரைஸ்
திமுக தரப்பில் மகளிர் உரிமைத் தொகையை போலவே, முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மீனவர்கள், நீலகிரி தேயிலை தோட்ட விவசாயிகள் ஆகியோருக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்கி தமிழ்நாடு அரசு இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளது. இதேபோல வேலுமணியும் அவரின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தன் தொகுதி மக்களுக்கு மட்டும் வேலுமணி சார்பில் 200 லிட்டர் கொள்ளளவிலான டிரம்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் கணிசமாக உள்ள பட்டியலின மக்களுக்கு தான் டிரம்கள் வழங்கப்படுகின்றன. தொண்டாமுத்தூர் தொகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தில் சுமார் 25,000 வாக்குகள் உள்ளன.
லாரியில் இறங்கும் டிரம்கள்
அவர்களின் வாக்குகளை அப்படியே அள்ளுவதற்கு தான் வேலுமணி டிரம்களை கொடுக்கிறார். தினசரி ஏராளமான லாரிகள் மூலம் டிரம்கள் கொண்டு வரப்படுகின்றன. தினமும் காலை 6-8 மணிளவில் ஒவ்வொரு பகுதியிலும் மக்களை குறிப்பிட்ட பகுதிக்கு வரவழைத்து டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அடுத்தடுத்து பரிசுகள் இறங்குவதால் தொகுதிக்குள் வேலுமணியின் கை ஓங்க தொடங்கியுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications