கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. சொத்து வரியில் ரூ.5,000 வரை சலுகை.. மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை எப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சிறப்பு சலுகை என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டும் பெரிய மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. கோவை மாநகராட்சிக்கு வருவாய் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்ட வரிகள்தான். இந்த வரிகள் மூலமாகத்தான் கோவை மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

special-discount-of-5-percent-if-property-taxes-due-to-the-coimbatore-corporation-are-paid-by-april

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் மூலமாகவும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2025 - 20026 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டிற்கான கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை எப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சிறப்பு சலுகை என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ. 5,000/- என்பதற்கு உட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும்.

மேலும், சொத்துவரி தொகையினை ரொக்கமாக அனைத்து வரிவசூல் மையங்களிலும் செலுத்தலாம். மேலும் மண்டல அலுவலக வரிவசூல் மையங்களில் ரொக்கம், காசோலை, வங்கி வரைவோலை மூலமாக செலுத்தலாம். மேலும், GooglePay, Phonepe மற்றும் Paytm போன்ற App மூலமாகவும், Credit Card & Debit Card மூலமாகவும் tnurbanepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+