“பாஜகவுக்கு எத்தனை சீட்னு சொல்லும் இடத்தில் நான் இல்லை.. அந்த மீட்டிங்கிற்கு போகல”- அண்ணாமலை பேட்டி!
சென்னை: அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் சீட் எண்ணிக்கை பற்றி ஒரு தகவல் தமிழக அரசியல் அரங்கில் சமீப நாட்களாக உலவி வருகிறது. பாஜக 23 இடங்களில் போட்டியிட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபற்றிய கேள்விக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "டிசம்பர் கடைசி வாரத்தில் இருக்கிறோம். இன்னும் 3 மாதங்கள் முழுமையாக உள்ளது. ஆகையால், தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும்? அதன் வலிமை எப்படி இருக்கும்? என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கடலூரில் ஜனவரி 9 ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்தவிருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஜனவரியில் எந்த முடிவையும் எடுப்பதாய் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கூறியிருக்கிறார். ஓபிஎஸ்ஸும் நேற்றுதான் கட்சிக் கூட்டம் நடத்தி, கருத்துகளைக் கேட்டிருக்கிறார். ஆகையால், எல்லாரும் நல்ல முடிவு எடுப்பார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக தேர்தல் களத்தில் நின்று, ஒரு பெரும் வெற்றியைப் பெறுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன. பொறுமை காப்போம், நேரம் இருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒற்றை இலக்கு. எல்லா தலைவர்களும், எல்லா கட்சிகளும் மரியாதையாக நடத்தப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமரும்" என்று தெரிவித்தார்.
சமீபத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் சீட் எண்ணிக்கை பற்றி ஒரு தகவல் தமிழக அரசியல் அரங்கில் உலவி வருகிறது. பாஜக 23 இடங்களில் போட்டியிட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "நான் எந்த மீட்டிங்கிலும் இல்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை சொல்லும் இடத்தில் நான் இல்லை. எனவே இதுபற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட தலைவர்கள் தான் இதுபற்றி கருத்துச் சொல்லவேண்டும். பியூஷ் கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார், எல்லா கட்சிகளுடனும் பேச வேண்டிய நேரத்தில் பேசி முடிவு செய்வார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக












Click it and Unblock the Notifications