Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனல் தெறித்த அண்ணாமலையின் பேச்சு.. தேசியத்தின் குரலாக ஒலிக்கும் பாஜக.. எஸ்.ஆர்.சேகர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த கருப்பு தின பேரணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியது, தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலாக அமைந்த ஒரு செயலை, கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்று மழுப்பும் இந்த ஓட்டுப் பிச்சை கட்சிகளுக்கு சவுக்கடியாக அமைந்தது. காவல் துறையை ஒரு ஏவல் துறையாக மட்டுமே செயல்படுத்தும் கழகங்களுக்கு, எப்படிப்பட்ட மாற்று தேவை என்று உரைத்தது.

coimbatore sr sekar annamalai

கொலை குற்றவாளியை கட்டிப்பிடிக்கும் முதலமைச்சர், தமிழர்களை கொன்ற தீவிரவாதிக்கு ஊர்வலம் நடத்த அனுமதிக்கும் சட்டம் ஒழுங்கு, தீவிரவாதிக்கு இரங்கற்பா வாசிக்கும் கட்சிகள் என்று நாலாபுறமும் மறைமுக பிரிவினைவாதம் தமிழகத்தை சூழ்ந்து கொண்டிருக்கும்போது. அந்தக் காரிருளை கிழிக்கும் மின்னலாக, தேசியத்தை போற்றிப் பாதுகாக்கும் ஒரே இயக்கமாக பாஜக மட்டுமே இருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் நேற்றைய கருப்பு தின பேரணி.

இந்தியாவிற்கான சுதந்திரக் கணலை வார்த்தெடுத்த இந்த தமிழக மண்ணில், அந்த தேசிய சிந்தனையை காக்க கடைசிவரை பாஜக களத்தில் நின்று போராடும். வாழ்க தமிழ்! வளர்க தமிழ் மக்கள்!! ஜெய்ஹிந்த் !!! என்று தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, பாஷாவின் உடலை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஊர்வலத்துக்கு பாஜக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணிக்கு நேற்று அழப்பு விடுக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவை விகேகே மேனன் சாலையில் கருப்பு பேரணியில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அண்ணாமலை பேசுகையில், 2022 ஆம் ஆண்டு மனித வெடி குண்டாக மாறி கோவையை தாக்க திட்டமிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் பிரபல துணிக்கடையில் காரை நிறுத்தி சேதம் ஏற்படுத்த முயற்சித்தனர்.

1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பலத்த காயமடைந்தனர். அந்த பாஷாவை அப்பா என்று சீமான் கூறுகிறார். உயிரிழந்த யாருக்கும் அப்பா இல்லையா. ஓட்டு பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் பாஷாவை, தியாகி.. வீரவணக்கம் என்று கூறுகிறார்.

இதைவிட மோசமாக ஓட்டு பிச்சை யாராலும் எடுக்க முடியாது. இதே பாஷா 2003 ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில் நரேந்திர மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன் என்று கூறியதை மறக்க கூடாது. பாஜக அமைதியை மட்டுமே விரும்புகிறது. இது மாற்றத்துக்கான சரியான நேரம். அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க சிறுபான்மை மக்கள் தங்களிடம் ஓட்டு கேட்க வருபவர்களை விரட்டியடிக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை செலுத்துகின்றனர். இந்த வீரத்தை சத்தியமங்கலத்தில் சதி திட்டம் போட்ட தீவிரவாதிகள் மீது ஏன் காட்டவில்லை. கோவையில் இந்தமுறை வானதி அக்காவுடன் இணைந்து ஆறு எம்எல்ஏக்களையாவது சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

பேரணியில் ஈடுபட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்து கணபதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர். அண்ணாமலை மீது BNSS 170 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்ட 917 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+