சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்.. காலையில் நாளிதழ் படிக்கும் போது மாரடைப்பு
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
Recommended Video

கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அதிமுகவின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறார்.

இந்த நிலையில் இன்று காலை சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் முன்னே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே மரணம் அடைந்தார்.
எம்எல்ஏ கனகராஜூக்கு வயது 64 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2016 சட்டசபை தேர்தலில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் எம்எல்ஏ கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications