ரயில் பயணத்தில்.. பெண் மீது காலை தூக்கி போட்ட திமுக பிரமுகர்.. அதிரடி கைது
பெண் விவகாரம் தொடர்பாக சூலூர் தொகுதி திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

கோவை: பெண் மீது காலை தூக்கி போட்டதாக புகார் எழுந்ததால், திமுக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் கடந்த 15 வருஷமாக பேரூராட்சி தலைவராக இருந்தவர்.
நேற்று இரவு சூலூர் திமுக அலுவலக கூட்டத்திற்கு சந்திரன் வந்திருந்தார். அப்போது அங்கே வந்த ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் கூட்டத்திலேயே சந்திரனை அதிரடியாக கைது செய்தனர்.

காலை போட்டார்
கடந்த 8-ஆம் தேதி சந்திரன் சென்னையில் நடைபெற்ற திமுக நேர்காணலுக்கு சென்றுவிட்டு கோவைக்கு ரயிலில் திரும்பியுள்ளார். அப்போது ரயிலில் தன் பெட்டியில் பயணம் செய்த பெண்ணின் மீது அவரின் கால் தவறுதலாக பட்டுவிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

அபாய சங்கிலி
இதனால் அந்த பெண் அலறி கூச்சல் போட்டுள்ளார். இதை பார்த்த சக பயணிகளில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ஓடும் ரயிலை நிறுத்தி இருக்கிறார். அப்போதுதான் இந்த சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது. உடனடியாக சந்திரன், ரயில்வே போலீஸாரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சமாதானம் செய்துவிட்டு கோவை திரும்பி இருக்கிறார்.

கடும் ஆத்திரம்
இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லி, சேலம் ரயில்வே போலீசார் சூலூர் வந்து சந்திரனை கைது செய்து கொண்டு போனார்கள். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், திமுக பிரமுகர் இப்படி செய்த சம்பவம் கடுமையான அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தந்துள்ளது.

உண்மை என்ன?
தேர்தல் நேரத்திலாவது கை, காலை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க கூடாதா என்று ஒரு பக்கமும், இது பொய் புகார், வேண்டுமென்றே பழி போடும் அரசியல் சதி என்று மற்றொரு பக்கமும் சொல்லப்படுகிறது. எனினும் இந்த விஷயத்தில் உண்மை நிலவரம் என்னவென்பது விசாரணையின்போதுதான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications