லுலு மால் சர்ப்ரைஸ்.. கோயம்புத்தூர் ஆஃபரை விடுங்க, இப்ப தங்கம் உட்பட 3 விருதுகளை அள்ளிய லுலு மால்ஸ்
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் லுலு மால் எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்து, சர்ப்ரைஸ் தருவது வழக்கம். ஆனால், இப்போது லுலு மாலுக்கே சர்ப்ரைஸ் தரப்பட்டுள்ளது.. அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.. இதுகுறித்த செய்திகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
லுலு மால் இந்தியாவில் பல இடங்களில் கிளைகளை பெற்றிருக்கிறது.. குறிப்பாக, கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் லுலு மால்கள் உள்ளன.

சென்னை, கோவை லுலு
சென்னையிலும் லுலு மால் வரப்போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.. சென்னையில் ஏற்கனவே நிறைய ஷாப்பிங் மால்கள் குறிப்பாக, பீனிக்ஸ் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ , ஆம்பா ஸ்கைவாக், போன்ற பிரம்மாண்டமான மால்கள் உள்ளதால், சென்னைவாசிகளுக்கு மிகுந்த உபயோகமாக இருந்து வருகிறது.
ஆனால், இவைகளையும்விட, மிக பிரம்மாண்டமான முறையில், புதிய மால் அமைப்பதற்கான வேலையை லுலு நிறுவனம் கையிலெடுத்து வருவதாகவும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் லுலு மால் வரப்போவதாகவும் கூறுகிறார்கள்..
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, கோயம்புத்தூர் நகரில் திறக்கப்பட்ட லுலு மாலும், மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது.. மிகப்பெரிய தொழில் நகரமான கோவையில், ஹைப்பர் மார்க்கெட்டை அமைத்திருக்கிறது லுலு நிறுவனம். அவிநாசி சாலையில், லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக இந்த ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
சர்ப்ரைஸ் தரும் லுலு
இந்த மால் திறக்கப்பட்ட நாளிலிருந்தே இன்றுவரை, விற்பனையில் படுபிஸியாக செயல்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம், லுலு மால்களில் அடிக்கடி அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர்கள்தான். கோவை மட்டுமல்லாமல், லுலு மால் செயல்படும் இடங்களில் எல்லாம் இந்த தள்ளுபடி அறிவிப்புகள்தான் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில், லுலு மாலுக்கு 3 விருதுகள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.. சர்வதேச ஷாப்பிங் மையங்கள் கவுன்சிலின், குளோபல் மேக்ஸி விருதுகள் 2025 சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.. இதில்தான் லுாலுா மால் மூன்று விருதுகளை பெற்றிருக்கிறது..
வரிசையாக விருதுகள்
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மலர் கண்காட்சியை நடத்திய, கொச்சி லுாலுா மால் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த விளையாட்டு போட்டிகளை நடத்திய, லக்னோ லுாலுா மாலுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
அதாவது, சிறந்த மலர் கண்காட்சியை நடத்திய, கொச்சி லுாலுா மால் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த விளையாட்டு போட்டிகளை நடத்திய, லக்னோ லுாலுா மாலுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.
சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய, திருவனந்தபுரம் லுாலுா மாலுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. உலகில் மதிப்புமிக்க அங்கீகாரங்களில் ஒன்றான, ICSC குளோபல் மேக்சி விருதுகள் - 2025'ல், இந்த 3 முக்கிய விருதுகளை, லுலு மால்ஸ் பெற்றிருக்கிறது.
பூரித்த இயக்குனர்
இதுகுறித்து லுாலுா மால் இயக்குனர் சிபுபிலிப்ஸ் சொல்லும்போது, ''உலகளவில் 3 விருதுகளை பெற்றிருப்பதன் மூலம், எல்லைகளைத் தாண்டிச் செல்வதிலும், எங்கள் பார்வையாளர்களுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை உருவாக்குவதிலும், எப்போதும் சாதாரண அனுபவங்களைத் தாண்டிச் செல்லும் அனுபவங்களை வழங்குவதிலும், எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது" என்று பூரித்து சொல்கிறார்.
உலகளவில், 15 நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில், லுாலுா மால், இரு தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், வென்றிருப்பது, உலக வர்த்தகத்தின் கவனத்தையும் பெற்று வருகிறது. அத்துடன், உலகளாவிய சில்லரை விற்பனை அரங்கில், தன் நிலையை அந்நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications