ஸ்விக்கியில் ஆர்டர் செய்ததோ ஐஸ்கிரீம்.. டெலிவரி ஆனதோ காண்டம்.. அதிர்ந்த கோவை.. ஏமாந்த குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் தனது குழந்தைக்காக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த நபருக்கு ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனம் ஆணுறைகளை டெலிவரி செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனது குழந்தைகள் கேட்டதன் பேரில் ஐஸ்கிரீம், சிப்ஸ் ஆகியவற்றை உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் ஆர்டர் செய்துள்ளார்.

ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொள்ளை பிரியாமாச்சே!. குழந்தைகள் ஆசை ஆசையாய் காத்திருந்தனர். உடனே அவர்களது வீட்டு காலிங் பெல் சப்தம் கேட்டது.

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம்

அய்யா ஐஸ்கிரீம் வந்துவிட்டது என குழந்தைகள் சந்தோஷத்தில் குதித்தனர். அவரது தந்தை கதவை திறந்து அந்த ஐஸ்கிரீம் ஆர்டரை பெற்றுக் கொண்டார். இதையடுத்து குழந்தைகள் முன்பு அந்த பாக்கிங்கை பிரித்த பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகள் ஐஸ்கிரீமை சுவைப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

அவதி

அவதி

அந்த பொருளை எடுப்பதா வேண்டாமா என பெரியசாமி அவஸ்தைப்பட்டுள்ளார். குழந்தைகளும் அப்பா சீக்கிரம் ஓபன் செய்யுங்க என சொல்ல பெரியசாமிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. உடனே சுதாரித்த பெரியசாமி, இது நாம் கேட்ட ஆர்டர் இல்லை. வேறு ஆர்டர் என சொல்லி குழந்தைகளை அந்த பேக்கை பிரிக்கவிடாமல் சமாளித்தார்.

குழந்தைகள் தூங்கியதும்

குழந்தைகள் தூங்கியதும்

இதையடுத்து குழந்தைகள் தூங்கிய பிறகு இவர் ஆர்டர் செய்த பேக்குடன் வந்த பில்லையும் அவர்கள் அனுப்பிய காண்டமையும் புகைப்படம் எடுத்து ஸ்விக்கியின் ட்விட்டர் பக்கத்திற்கு புகார் அனுப்பினார். இது குறித்து பெரியசாமி அந்த பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று இரவு குழந்தைகள் கேட்டதற்காக இரு ஐஸ்கிரீம்கள் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்தேன்.

சிறிய பேக்

சிறிய பேக்

டெலிவரி பாய் சிறிய பேக்கிங்கில் கொடுத்தார். அப்போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் பேக்கிங்கை பிரித்து பார்த்த போது அதில் ஆணுறை இருந்தது. இது தொடர்பாக டெலிவரி பாயிடம் கேட்டால் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்கிறார். சேவை மையத்தை தொடர்பு கொண்டு இந்த ஆர்டரை எடுத்துக் கொண்டு நான் கேட்டதை கொடுங்கள் என்றால் அப்படியெல்லாம் செய்ய முடியாது என கூறி பணத்தை ரிட்டர்ன் செய்துவிட்டார்கள் என புகாரில் தெரிவித்துள்ளார்.

ஸ்விக்கி நிறுவனம்

ஸ்விக்கி நிறுவனம்

இதையடுத்து ஸ்விக்கி நிறுவனம், பெரியசாமி அவர்களே தவறான டெலிவரியை உங்களுக்கு தந்ததற்கு வருந்துகிறோம். உங்களது ஆர்டர் எண்ணை கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+