2024ல் சித்தராமையாவுக்கும் டிகே சிவகுமாருக்கும் நோபல் பரிசே கொடுத்திடலாம்.. அண்ணாமலை கிண்டல்
சென்னை: "கர்நாடக அரசு ஒரு வருடத்தில் சீட்டுக்கட்டு போல் சரிந்துவிடும். டி.கே.சிவகுமாரும் சித்தராமையாவும் 2024க்குள் சண்டையிடாவிட்டால் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிடலாம்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கிண்டல் செய்துள்ளார்
சென்னையில் அண்ணாமலை சனிக்கிழமை ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசுகையில் , பொதுவாக அமைச்சர்களுக்கு எல்லாம் முதன்மையானவர் முதலமைச்சர், முதலமைச்சர் ஆளுநருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளவர். இப்படித்தான் தற்போது உள்ள அரசுகள் இயங்குகின்றன.

ஆனால் கர்நாடகாவில் எப்படி இருக்கிறது என்றால், ஒரு முதலமைச்சர் 2.5 ஆண்டுகளும், அடுத்த முதலமைச்சர் 2.5 ஆண்டுகளும் ஆட்சி செய்ய போகிறார்களாம். ஒரு முதலமைச்சர் சித்தராமையா கட்டுப்பாட்டில் 10 அமைச்சர்களும், டிகே சிவகுமார் கட்டுப்பாட்டில் 10 அமைச்சர்களும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கட்டுப்பாட்டில் 10 அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு கட்டமைப்பு எந்த உலகத்தில் எங்காவது உண்டா? எல்லா இடத்திலும் ஒரு முதலமைச்சர் தான் பொறுப்பில் இருப்பார். ஆனால் கர்நாடாகவில் மூன்று முதலமைச்சர்கள் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
எனவே கர்நாடகா உள்ள காங்கிரஸ் அரசு அடுத்த ஒரு வருடத்தில் சீட்டு கட்டுபோல் சரிந்துவிடும். டி.கே.சிவகுமாரும் சித்தராமையாவும் 2024க்குள் சண்டையிடாவிட்டால் இருவருக்கும் 2024ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிடலாம். ஏனெனில் 100 சதவீதம் மோதல் இவர்களுக்குள் வரும். ஏனெனில் அப்படித்தான் கட்டமைப்பு இருக்கிறது.
2.5 வருசத்திற்கு ஒரு முதலமைச்சர் என்று இருந்தால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எப்படி தெரியும். கர்நாடகாவில் ஒரு வலிமையான முதல்வர் இல்லை என்று தானே தெரியும். டிகே சிவகுமார் கட்டுப்பாட்டில் 10 பேர், சித்தராமையா கட்டுப்பாட்டில் 10 பேர் என அமைச்சர்கள் இருந்தால் யாருக்கு பொறுப்புள்ளவர்களா இருப்பார்கள்

அப்புறம் நீங்கள் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமையை பற்றி கேட்கிறீர்கள்? காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்கிற போது எதிர்க்கட்சிகள் எப்படி ஒன்றுபடும். மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், கேசிஆர், என இவர்கள் யாருமே காங்கிரஸ் கூட்டணியில் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாது" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல்.. பெங்களூர் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications